Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd December 2023 13:53:55 Hours

இராணுவ தளபதி சவால் கிண்ண தேசிய கூடைப்பந்து போட்டியில் கொழும்பு கழகம் வெற்றி

2023 இன் இராணுவத் தளபதி சவால் கிண்ண கழகங்களுக்கிடையிலான கூடைப்பந்தாட்ட இறுதிப் போட்டி வெள்ளிக்கிழமை (டிசம்பர் 22) பனாகொட இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. இப் போட்டியில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

தேசிய மட்டத்தில் கூடைப்பந்து விளையாட்டிற்கு புத்துயிர் ஊட்டுவதற்கு முதன்முறையாக 'இராணுவத் தளபதி சவால் கிண்ண கூடைப்பந்தாட்டப் போட்டி' இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் முயற்சியின் பேரில் டிசம்பர் 15 ஆம் திகதி பனாகொடவில் உள்ள இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.

கொழும்பு கூடைப்பந்தாட்ட கழகம், பபலோஸ் கூடைப்பந்தாட்ட கழகம், மொரட்டுவ கூடைப்பந்தாட்ட கழகம், வத்தளை கூடைப்பந்தாட்ட கழகம், கஜா தொலைக்காட்சி கூடைப்பந்தாட்ட கழகம், ஆர்பிசி கூடைப்பந்தாட்ட கழகம், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய அணிகள் உட்பட நாடளாவிய ரீதியில் 9 கூடைப்பந்து அணிகள் பனாகொடயில் நடைபெற்ற இப்போட்டியில் போட்டியிட்டன. இறுதிப் போட்டிக்கு இலங்கை இராணுவ கூடைப்பந்து அணியும் கொழும்பு கூடைப்பந்தாட்ட கழக அணியும் தெரிவாகின.

உள்ளக விளையாட்டரங்கிற்கு வருகை தந்த இராணுவத் தளபதியை, இராணுவ கூடைப்பந்து குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் எஸ்.ஏ குலதுங்கே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார். அதன் பின்னர், இரு அணித் தலைவர்களும் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் தமது அணி வீரர்களை இராணுவத் தளபதிக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.

'இராணுவத் தளபதியின் சவால் கிண்ணம் – கழகங்களுக்கிடையேயான கூடைப்பந்தாட்டப் போட்டி 2023' இல் கொழும்பு கூடைப்பந்தாட்டக் கழகம் சம்பியன்ஷிப்பை வென்றதுடன், இலங்கை இராணுவக் கூடைப்பந்தாட்ட அணி இரண்டாம் இடத்தைப் பெற்றது.

ஆரவாரம் மற்றும் கரகோஷங்களுக்கு மத்தியில், வெற்றி பெற்ற அணிகளுக்கு கிண்ணங்களை வழங்க இராணுவ தளபதி அழைக்கப்பட்டார்.

இராணுவ கூடைப்பந்து குழுவின் செயலாளர் பிரிகேடியர் எம்.பீ.எஸ்பீ குலசேகர டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் நன்றியுரை ஆற்றியதுடன், நிகழ்வின் இறுதியில் இராணுவ கூடைப்பந்து குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் எஸ்.ஏ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ அவர்களினால் இராணுவ தளபதிக்கு நினைவுச்சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டது.

'இராணுவ தளபதி சவால் கின்ன கூடைப்பந்து போட்டி' இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், இது நீண்டகாலமாக தேசியக் குழுவில் உள்வாங்கப்படக்கூடிய திறமையான கூடைப்பந்து வீரர்களைக் கண்டறிந்து, விளையாட்டை நாடு முழுவதும் உயர் தரத்திற்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இராணுவ கூடைப்பந்து குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் எஸ்.ஏ குலதுங்க ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ மற்றும் இராணுவ கூடைப்பந்து குழுவின் செயலாளரான பிரிகேடியர் எம்.பீ.எஸ்.பீ குலசேகர டப்ளியுடப்ளியுவீ ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ ஆகியோரின் மேற்பார்வையில் இலங்கை இராணுவ கூடைப்பந்து குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட போட்டிகள் தேசிய அளவில் விளையாட்டின் முழுமையான மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும்.

இறுதிப் போட்டியை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நேரில் பார்வையிட்டனர்.