Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd December 2023 15:32:08 Hours

தாமரை தடாகத்தில் இராணுவ பாடகர்களின் உணர்வுபூர்வமான நத்தார் கரோல் கீதங்கள்

எதிர்வரும் நத்தார் மற்றும் புத்தாண்டினை கொண்டாடும் வகையில் தமது சுகதுக்கங்களை பகிர்ந்து கொள்வதற்கும் நல்லெண்ணத்தினை மேற்படுத்தவும் இலங்கை இராணுவம், வியாழக்கிழமை (21) தாமரை தடாக கேட்போர் கூடத்தில் தனது வருடாந்த நத்தார் கரோல் கீத நிகழ்வினை நடாத்தியது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் இராணுவ கிறிஸ்தவ மன்றத்தின் அழைப்பின் பேரில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடத்தப்பட்ட இந்நிகழ்வில், சமாதானத்தின் இளவரசர் இயேசு கிறிஸ்துவுக்கு கூட்டுப்பாடல் பாடி அவரது பிறப்பை அறிவித்தனர். அது உலக அமைதி மற்றும் செழிப்புக்கான பிரார்த்தனையாகவும் காணப்பட்டது.

இராணுவ கிறிஸ்தவ சங்கத்தின் செயலாளரான மேஜர் ஜெனரல் பிகேஜிஎல்எம் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சி ஐஜீ அவர்களின் கிறிஸ்மஸ் செய்தி வாசிப்பை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின. ஆரம்ப பிரார்த்தனையினை கொழும்பு பேராயர் இல்லத்தின் உதவி ஆயர் அருட்தந்தை (கலாநிதி) எண்டன் ரஞ்சித் அவர்கள் நிகழ்த்தினார்.

இந் நிகழ்வில் முன்னாள் தளபதிகள், ஜெனரல் சீஎஸ் வீரசூரிய (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ, ஜெனரல் ஆர்எம்டி ரத்நாயக்க (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியு பீஎஸ்சீ, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, விமானப்படை தளபதி எயார் மார்ஸல் உதேனி ராஜபக்ச ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ எம்எஸ்சி(எம்ஓஏ) அமெரிக்கா எம்எஸ்சி ( பாதுகாப்பு கற்கைகள்) எம்ஏ ஐஎஸ் மற்றும் எஸ் (ஐக்கிய இராச்சியம்) பிஎஸ்சி ( பாதுகாப்பு கற்கைகள்) எம்ஐஎம் (இலங்கை) ஏஎம்ஐஈ ( இலங்கை), இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, இராணுவ பிரதி பதவி நிலை மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீ எல்எஸ்சி மற்றும் விருந்தினர்கள் பருவகால ஏற்பாட்டில் கலந்து கொண்டனர்.

பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியின் பாரியார் திருமதி சுஜீவா நெல்சன், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே, சிரேஷ்ட அதிகாரிகளின் துணைவியர் மற்றும் அழைப்பாளர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

‘நமக்காக ஒரு குழந்தை பிறக்கிறது’ என்ற தொனிப்பொருளில் அமைந்த கரோல் கீதங்கள் இராணுவ பாடகர்களுடன் புனித ஜோசப் கல்லூரி, கொட்டாஞ்சேனை குட் ஷெப்பர்ட் கன்னியர் மடம், புனித செபஸ்டியன் கல்லூரி மற்றும் டி மெஸனட் கல்லூரி ஆகியவற்றின் பாடகர்கள் இணைந்து பாடினர். இராணுவ கிறிஸ்தவ சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பிகேஎஸ்ஏ பெர்னாண்டோ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்கள் வழங்கிய வழிகாட்டுதலின் பேரில் இராணுவ கிறிஸ்தவ சங்கத்தின் செயலாளர் மேஜர் ஜெனரல் கேபீஜிஎல்எம் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சி ஐஜி தனது சங்க உறுப்பினர்களுடன் இணைந்து இலங்கை இராணுவ கிறிஸ்தவ சங்கத்தின் ஆலோசகர் அருட்தந்தை (கலாநிதி) நோயல் டயஸ் தலைமையில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

"நமோ மரியானே 'சைலண்ட் நைட்', 'ஒன்ஸ் இன் ரோயல்', 'கிறிஸ்துமஸ் தாலாட்டு', "ஜிங்கிள் பெல்ஸ்", "சைலண்ட் நைட்" போன்ற பிரபலமான மற்றும் பண்டிகைகால கீதங்கள், இராணுவ பாடகர்கள் பாடியதுடன் அவை சிறப்பு விருந்தினர்களின் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பெற்றன.