Header

Sri Lanka Army

Defender of the Nation

16th December 2023 09:00:51 Hours

மன்னாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்கும் பணியில் வன்னிப் படையினர்

வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினர் பளை ஆறு, தேவன்பிட்டி, முண்டலம்பிட்டி மற்றும் தெத்தவாடிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை (15 டிசம்பர் 2023) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 359 க்கும் மேற்பட்ட பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

54 வது காலாட் படைப்பிரிவின் 541 வது காலாட் பிரிகேட் படையினர் மற்றும் 5 வது (தொ) இயந்திரவியல் காலாட் படையணியின் படையினர் நிவாரண நடவடிக்கையில் முன்னிலை வகித்தனர்.

வடமாகாணத்தில் தொடர் மழையினால் பளை ஆறு நீர் மட்டம் கடந்த சில நாட்களாக நிரம்பி வழிவதால் மன்னார் மாவட்டம் வவுனிக்குளம் நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளை திறக்க வேண்டிய நிர்ப்பந்தம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. அதன் தாக்கம் காரணமாக, மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பகுதியிலுள்ள பெருமளவிலான பொதுமக்களும் சில கிராமங்களும் வெள்ள அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.

அந்த சிரமங்களைக் கருத்தில் கொண்டு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ.ஏ.டி.டபிள்யூ. நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியூ அவர்கள் வெள்ளிக்கிழமை (15) அதிகாலை 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 541 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோருக்கு பாதிப்புக்களை கண்காணித்து தேவையான அவசரகால நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.