Header

Sri Lanka Army

Defender of the Nation

16th December 2023 07:22:22 Hours

23 வது காலாட் படைப்பிரிவினால் 323 பாடசாலை மாணவர்களுக்கு உதவி

23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்களுக்கு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) வெலிகந்தவிலுள்ள சிங்கபுர கனிஷ்ட வித்யாலயா மற்றும் சுசிரிகம ஆரம்ப பாடசாலை ஆகிய இரு பாடசாலைகளிலும் 323 மாணவர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை கல்வி உபகரணங்களை பரிசாக வழங்குவதற்காக மாணவர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளின் போது, சிங்கபுர கனிஷ்ட வித்தியாலயத்தில் 190 மாணவர்களும், சுசிரிகம ஆரம்ப பாடசாலையில் 133 மாணவர்களும் அந்த உதவிப் பொதிகளைப் பெற்றுக்கொண்டதுடன் 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் வேண்டுகோளுக்கு இணங்க கொழும்பு பிரதேசத்தில் உள்ள நலன் விரும்பிகள் குழுவினால் இந் நிகழ்விக்கு அனுசரணை வழங்கப்பட்டது.

மேலும், மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்களால் குவளைகள், உணவருந்தும்பொருட்கள், தளபாடங்கள், கோப்பைகள், மின்குமிழ்கள் மற்றும் எழுதுபொருட்கள் உள்ளிட்ட சிறப்பு உபகரணப் பொதிகளும் இரு பாடசாலைகளுக்கும் நன்கொடையாக வழங்கப்பட்டன. இரு பாடசாலைகளிலும் நிகழ்த்திய கலாசார நடனங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நடைபெறும் போது நிகழ்விற்கு கவர்ச்சியையும் வண்ணத்தையும் சேர்த்தது. நிகழ்வுகளுக்குப் பிறகு, பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட படைப்பிரிவின் தளபதி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பயனாளிகளுடன் அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் பிற பிரச்சினைகள் பற்றி மேலும் கலந்துரையாடினார்.

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி ஐஜீ 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி 233 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஏகேசிஎஸ் டி சில்வா ஆர்எஸ்பீ ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் 9 வது இலங்கை பீரங்கி படையணி படையினரால் இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இந்நிகழ்வில் 233 வது காலாட் பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அரச அதிகாரிகள் பங்குபற்றினர்.