Header

Sri Lanka Army

Defender of the Nation

16th December 2023 07:17:48 Hours

பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதி 6 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணியிக்கு விஜயம்

நிதி முகாமைத்துவ பணிப்பாளர் நாயகமும் பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் புதன்கிழமை (டிசம்பர் 13) மீகொட 6 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணியிக்கு முறையான விஜயத்தை மேற்கொண்டார்.

படைத் தளபதி 6 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணியின் பங்கு மற்றும் கடமைகள் பற்றிய விரிவான விளக்கத்தைக் பெறுவதற்கு முன்னர் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. படையினருக்கு அவர் ஆற்றிய உரையில் கடமையில் அனைவரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்ததோடு 6 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணியின் தரத்தை உயர்த்துவதற்கு படையினர் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டினார்.

அந்த நாளை நினைவுபடுத்தும் வகையில், குழுபடம் எடுக்கப்பட்டதுடன் வளாகத்தில் மரக்கன்றும் நடப்பட்டது. மேலும், 6 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணியின் படையினருடன் படைத் தளபதி தேநீர் விருந்தின் போது உரையாடினார். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.