Header

Sri Lanka Army

Defender of the Nation

16th December 2023 07:25:13 Hours

232 வது காலாட் பிரிகேடின் 12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் வெள்ள நிவாரண நடவடிக்கை

23 வது காலாட் படைப்பிரிவின் 232 வது காலாட் பிரிகேடின் 12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் கடந்த இரண்டு நாட்கள் (டிசம்பர் 14-15) கிராண், புலிபாய்ந்தகல், தொப்பிகல, குடிம்பிமலை மற்றும் பெரியவட்டுவான் ஆகிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கித் தவித்த 150 க்கும் மேற்பட்ட பொதுமக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு உதவினர்.

கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மட்டக்களப்பு வாழைச்சேனை ஆற்றில் கடந்த சில நாட்களாக நீர்மட்டம் வேகமாக உயர்ந்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நீர்த்தேக்கமான ரூகம் நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளை அதிகாரிகளை திறந்து விட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் காரணமாக கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஏராளமான பொதுமக்கள் மற்றும் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அந்த சிரமங்களைக் கருத்தில் கொண்டு, 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 232 வது காலாட் பிரிகேட் தளபதி, கடந்த வியாழக்கிழமை(14) முதல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சில அவசரகால நிவாரண நடவடிக்கைகளை ஆரம்பித்து அபிவிருத்திகளை உன்னிப்பாகக் கண்காணித்தனர்.