Header

Sri Lanka Army

Defender of the Nation

15th December 2023 19:04:44 Hours

புதிய பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி கடமை பொறுப்பேற்பு

இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீஎல்எஸ்சி அவர்கள் இராணுவத்தின் மூன்றாவது நியமனமான இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 16) இராணுவ தலைமையகத்தில் பதவியேற்றார்.

பௌத்த தேரர்களின் ‘பிரித் பாராயணத்துடன்’ மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீஎல்எஸ்சி அவர்கள் புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதற்கான அதிகாரப்பூர்வ பதிவேட்டில் கையெழுத்திட்டார். பின்னர், அவர் பௌத்த தேரர்களுக்கு ‘பிரிகர’ மற்றும் ‘கிலான்பச’ வழங்கி ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

தற்போது, மேஜர் ஜெனரல் எஸ்.பீ.ஏ.ஐ.எம்.பி சமரகோன் எச்டிஎம்சிஎல்எஸ்சீ அவர்கள் இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படைத்தளபதியாக கடமையாற்றுகின்றார்.

சிரேஷ்ட அதிகாரிகள், பணி நிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலரும் கலந்துகொண்டனர்.

மேஜர் ஜெனரல் எஸ்.பீ.ஏ.ஐ.எம்.பி சமரகோன் எச்டிஎம்சி எல்எஸ்சீ அவர்களின் சுருக்கமான விவரம் பின்வருமாறு;

மேஜர் ஜெனரல் எஸ்.பீ.ஏ.ஐ.எம்.பி சமரகோன் எச்டிஎம்சி எல்எஸ்சீ அவர்கள் 1988 பெப்ரவரி 28 ஆம் திகதி இராணுவ நிரந்தர படையணியின் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் பாடநெறி 29யில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர் இரண்டாம் லெப்டினன் நிலையில் 1989 டிசம்பர் 16 இல் இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியில் நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் அவர் பணியாற்றிய காலத்தில் அடுத்தடுத்த நிலைகளுக்கு சீராக உயர்த்தப்பட்ட பின்னர், 2021 மே 02 அன்று மேஜர் ஜெனரலாக நிலை உயர்வு பெற்றார்.

அவர் மூன்று தசாப்த இராணுவ வாழ்க்கையில் இலங்கை இராணுவத்தில் அந்தந்த நியமனங்களில் அவரது அசாதாரண திறன்களை எடுத்துக்காட்டும் வகையில் கட்டளை, பணியாளர்கள் மற்றும் பயிற்றுவிப்பு நியமனங்களில் பணியாற்றியுள்ளதுடன் மேலும் அவர் ஹைட்டியில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியில் இலங்கைக் குழுவின் தொழில்நுட்ப அதிகாரியாக வெளிநாடுகளில் பணியாற்றியுள்ளார்.

அவர் தனது இராணுவ வாழ்க்கையின் போது, நவீன மோட்டார் வாகனத் தொழில்நுட்பப் பாடநெறி, படையலகு கட்டளை அதிகாரி பாடநெறி, கனிஷ்ட அதிகாரி பாடநெறி (இந்தியா), உளவியல் செயல்பாடுகள் பயிற்சி பாடநெறி (அமெரிக்கா),பயிற்சி பட்டறை கட்டளை அதிகாரி(இந்தியா),நிதி முகாமைத்துவம் மற்றும் வழங்கல் முகாமைத்துவம் மற்றும் மனித வள முகாமைத்து கற்கை (பாகிஸ்தான்), சிரேஷ்ட அதிகாரி இஎம்இ பாடநெறி (இந்தியா), தரை பீரங்கி பழுதுபார்க்கும் பொறியியலார் பாடநெறி(சீனா), உயர் பாதுகாப்பு முகாமை பாடநெறி மற்றும் வழங்கல் பணிநிலை அதிகாரி பாடநெறி (பாகிஸ்தான்) போன்ற பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பாடநெறிகளை பயின்றுள்ளார்.

முதுநிலை முகாமைத்து பாடநெறி, வழங்கல் மற்றும் விநியோக முகாமைத்துவ கணினி செயற்திட்ட சர்வதேச உயர் டிப்ளோமா சான்றிதழ் போன்ற பல உயர் கல்வி மற்றும் இராணுவம் அல்லாத பாடநெறிகளை சிரேஷ்ட அதிகாரி பயின்றுள்ளதுடன் இலங்கை ஆட்டோமொபைல் சங்கம், இலங்கை முகாமைத்துவ நிறுவனம், வழங்கல் மற்றும் போக்குவரத்து தேசிய நிறுவனம் மற்றும் ஆட்டோமொபைல் பொறியியல் நிறுவனம் ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளார். மேலும் அவர் இலங்கை இராணுவ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் கௌரவ உறுப்பினராகவும் உள்ளார்.

மேலும் மேஜர் ஜெனரல் எஸ்.பீ.ஏ.ஐ.எம்.பி சமரகோன் எச்டிஎம்சி எல்எஸ்சீ அவர்கள் இலங்கையில் தொழில்முறை மற்றும் சிரேஷ்ட தேசிய விருது பெற்ற பந்தய படைவீரர் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் என்று பரவலாக அறியப்படுகிறார். மேலும் அவர் மோட்டார் விளையாட்டுத் துறையில் பல நியமனங்களை பெற்றுள்ளார்.