Header

Sri Lanka Army

Defender of the Nation

15th December 2023 17:14:18 Hours

தாமரைகோபுரம் திரையரங்கில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழா

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி பாடநெறி இல-17 இன் பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை (14) பிற்பகல் தாமரைகோபுரம் திரையரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி ஆனது முப்படைகளின் அதிகாரிகளுக்கான இராணுவக் கல்விக்கான மிக உயர்ந்த இடமாகும், மேலும் இது முப்படைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் அதிகாரிகளின் தொழில்முறை அறிவு மற்றும் கற்றலை வளர்க்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது. முப்படையினர், இலங்கை பொலிஸ் மற்றும் நட்பு வெளிநாட்டு நாடுகள் பொதுத்துறையில் அரச நிர்வாக நடைமுறைகள் தொடர்பான அறிவை வழங்கும் அதே வேளையில் கட்டளை மற்றும் ஏனைய அரச முகவர் நிலையங்கள் பணியாளர்களின் நியமனங்களுக்கு அவர்களை தயார்படுத்துவதாகும்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில் அவர்களுடன் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஆர்எஸ்பீ இரண்டு பார், வீஎஸ்வீ யூஎஸ்பீ எம்எஸ்சி (எம்ஒஎ) அமெரிக்கா, எம்எஸ்சி முகாமை (பாதுகாப்பு கற்கைகள்), எம்ஜீடி எம்எ இன் ஐஎஸ் மற்றும் எஸ் ஐக்கிய இராச்சியம், பிஎஸ்சி (பாதுகாப்பு கற்கைகள்), எம்ஐஎம் (இலங்கை),எஎம்ஐஇ (இலங்கை), ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி, அவர்களை விமானப்படைத் தளபதி மற்றும் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் பி.கே.ஜி.எம்.எல் ரோட்ரிகோ ஆர்எஸ்பி பிஎஸ்சி ஐஜி ஆகியோர் நுழைவாயிலில் வரவேற்றனர்.

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியில் பாடநெறி இல -17 இல் பங்களாதேஷ் 02, இந்தியா 03, இந்தோனேசியா 01, மாலைத்தீவு 02, நேபாளம் 02 , , பாகிஸ்தான் 02, ருவாண்டா 01, சவுதி அரேபியா 10, செனகல் 01 மற்றும் ஷாம்பியா 01 உட்பட 25 வெளிநாட்டவர்களுடன் , 148 இளங்கலை பட்டதாரிகள் இப்பாட நெறியியை பின்பற்றினர். 72 இராணுவம், 26 கடற்படை மற்றும் 24 விமானப்படை அதிகாரிகள், ஒரு பொலிஸ் அதிகாரி இந்தப் பாடநெறியில் 'தேர்ச்சியாளர் பதவிதாரிகள் கல்லூரி' (பீஎஸ்சி) பட்டப்படிப்பைப் பெறுகின்றனர்,

ஜனாதிபதி தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் பணிக்குழு பிரதானியுமான திரு. சாகல ரத்நாயக்க, இராஜதந்திர தூதரகங்களின் தலைவர்கள் மற்றும் இராஜதந்திரப் உறுப்பினர்கள், பாதுகாப்பு சேவைகள் கட்டளையின் முகாமைத்துவ பேரவை உறுப்பினர்கள், பதவிதாரிகள் கல்லூரியின் முன்னாள் கல்வியாளர்கள், முப்படை சிரேஷ்ட அதிகாரிகள், துணைவியர்கள், பெற்றோர்கள் மற்றும் பட்டதாரிகளின் நெருங்கிய உறவினர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். .

அன்றைய பிரதம அதிதியான அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பாதுகாப்பு சேவைகள் கட்டளை தளபதியுடன் இணைந்து கல்வியில் சிறந்து விளங்கிய அனைவரையும் விசேட பாராட்டுகள் வழங்கி கௌரவித்தார்.

பின்வரும் அதிகாரிகளுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

தங்க ஆந்தை விருது

1.இராணுவம்

அ.இலங்கை கவச வாகன படையணியின் மேஜர் டபிள்யூபிசிடி விஜேபால

ஆ.இந்தியா இராணுவத்தின் மேஜர் ரோகித்

2.கடற்படை

அ.இலங்கை கடற்படையின் லெப்டினன் கொமாண்டர் ஜேஎம்எச்ஐ பண்டார

ஆ.இந்திய கடற்படையணியின் லெப்டினன் கொமாண்டர் சன்னி சர்மா

3.விமானப்படை

அ.இலங்கை விமானப்படையணியின் அணித்தலைவர் ஜீடிடிபீ சேனாரத்ன

ஆ.இந்தியா விமானப்படையின் விங் கொமாண்டர் எஸ் மகாஜன்

தளபதியின் 'ஹானர்ஸ்':

1. இராணுவப் பிரிவில் உள்ள பெறுநர்கள்:

அ. இலங்கை கவசப் வாகன படையணியின் மேஜர் டபிள்யூ.பி.சீ.டி விஜேபால

ஆ. இலங்கை கொமாண்டோ படையணியின் மேஜர் எம்எல்டிபீ லியனாராச்சி

இ. பங்களாதேஷ் இராணுவம் மேஜர் எம்.டி. ஜுபேர் அலம்ப்ஸ்க்

ஈ. அமெரிக்க இராணுவம் மேஜர் ஹாரி கிம்

2. கடற்படைப் பிரிவில்

அ. இலங்கை கடற்படையின் லெப்டினன் கொமாண்டர் ஜேஎம்எச்ஐ பண்டார

ஆ. இந்திய கடற்படையின் லெப்டினன் கொமாண்டர் சன்னி சர்மா

3.ஏர் விங் பெற்றவர்கள்

அ. இலங்கை விமானப்படையின் அணித்தலைவர் ஜீடிடிபீ சேனாரத்ன

கோல்டன் பேனா விருது

இலங்கை கடற்படையின் லெப்டினன் கொமாண்டர் ஜே.எம்.எச்.ஐ பண்டார