Header

Sri Lanka Army

Defender of the Nation

14th December 2023 18:36:00 Hours

வெளிசெல்லும் அவுஸ்திரேலியா பாதுகாப்பு ஆலோசகர் இராணுவத் தளபதியை சந்திப்பு

கொழும்பு அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகராலயத்தின் வெளிசெல்லும் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ஐயன் கெய்ன் அவர்கள் (டிசம்பர் 14) அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை இலங்கையில் தனது பதவிக்காலம் பணியை முடித்துக் கொண்டு அவுஸ்திரேலியா திரும்புவதற்கு முன்னர் இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.

கொழும்பு அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அமந்தா ஜோன்ஸ்டன் சீஎஸ்சீ அவர்களும் சுமுகமான கலந்துரையாடலில் கலந்துகொண்டார். இந்தச் சுருக்கமான சந்திப்பின் போது, இரு தரப்பினரும் பொதுவான நலன்கள் மற்றும் இரு தரப்பு இராணுவ அமைப்புகளுக்கு இடையே வளர்ந்து வரும் உறவுகள் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

கெப்டன் ஐயன் கெய்ன் அவர்கள் தனது பதவிக்காலத்தில் இலங்கை இராணுவத்திடம் கிடைத்த அனைத்து ஆதரவிற்கும் தனது நன்றியைத் தெரிவித்ததோடு இலங்கை இராணுவத்தின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

சந்திப்பின் முடிவில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே வெளிசெல்லும் பாதுகாப்பு ஆலோசகரின் சேவையின் போது அவரது உறவுகள் மற்றும் நல்லெண்ணத்தைப் பாராட்டியதுடன் நினைவுச் சின்னம் வழங்கினார்.

மேலும், கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அமந்த ஜோன்ஸ்டன் சிஎஸ்சிக்கும் இராணுவத் தளபதி பாராட்டுச் சின்னம் வழங்கினார்.