Header

Sri Lanka Army

Defender of the Nation

30th November 2023 20:10:11 Hours

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் மண்சரிவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பணி நிலை அதிகாரிகள் , பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரிகளுடன் இணைந்து கரந்தகொல்ல, எல்லவில் அமைந்துள்ள மண்சரிவு அபாயம் உள்ள மலித்தகொல்ல கிராமத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் நிமித்தம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 26) கள விஜயம் மேற்கொண்டனர்.

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 26) காலை எல்ல, கரந்தகொல்ல, மலித்தகொல்ல கிராமத்தில் மண்சரிவு அபாயம் ஏற்பட உள்ளதாக 112 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு 11 வது காலாட் படைப்பிரிவின் பணி நிலை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன்பிறகு, ஏதேனும் அவசரநிலைகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் ,மதிப்பீடு செய்யவும் மற்றும் திட்டமிடவும் இந்த இரு தரப்பினரும் அப்பகுதிக்கு ஒரு களப் விஜயத்தை மேற்கொண்டனர்.

இந்த விஜயத்தின் போது, இரு தரப்பினரும் எல்ல-வெல்லவாய வீதியில் 24 மணி நேர வீதித் தடைகளை ஏற்படுத்த திட்டமிட்டனர். இது, கிராமத்தின் இரு முனைகளிலும் உள்ள பாதிக்கப்படக்கூடிய இடங்களுக்கு பயணிகளை பொலிஸாரின் உதவியுடன் எச்சரிக்கவும் மேலும், அச்சுறுத்தல் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வீதி எச்சரிக்கை பதாதைகள், இரவு முழுவதும் மின் விளக்குகளை ஒளிரசெய்தல்,அபாய எச்சரிக்கை ஒழி முறைமைகளறை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

மேலும், அடை மழை குறையும் வரை 09 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.