Header

Sri Lanka Army

Defender of the Nation

29th November 2023 12:45:46 Hours

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இலங்கை இராணுவ மகளிர் படையினருக்கு உரை

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரேமித பண்டார தென்னகோன் அவர்கள் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 21) பொரளை இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையகத்தில் பெண் சிப்பாய்களை சந்தித்து அவர்களின் எதிர்கால வாய்ப்புகள் மற்றும் அவர்களின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பது பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

நுழைவாயிலை வந்தடைந்த, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதியும் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் யூ.டி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ மற்றும் நிலைய தளபதி பிரிகேடியர் ஜேகேஆர் ஜயக்கொடி ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ ஆகியோர்களால் வரவேற்கப்படுவதற்கு முன்னர், இலங்கை இராணுவ மகளிர் படையணியினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

முதலில், வருகை தந்த அமைச்சர், வீரமரணம் அடைந்த பெண் வீராங்கனைகளின் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், அவர் தனது உரையின் போது, 2009 மே மாதத்திற்கு முன்னர் மனிதாபிமானப் போரின்போது உயிரிழந்த அனைத்து போர்வீரர்களையும், வீராங்கனைகளையும் நினைவு கூர்ந்தார். பெண் அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதை 55 வயது வரை நீடிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் குறித்து கூட்டத்தில் தெரிவித்தார். அவர் ஆண் அதிகாரிகளுக்கு இணையாக பதவி உயர்வுகளை வழங்குதல், இராணுவத்தில் பெண்களுக்கு தொழில் பயிற்சி வாய்ப்புகளை வழங்கும் அதே வேளையில், ஓய்வு பெறும் கால எல்லையை சிப்பாய்களுக்கு 22 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அவர் தனது உரையின் முடிவில், இந்த வாய்ப்பை ஏற்பாடு செய்த இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

பின்னர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதுடன், அங்கு அனைவரிடமும் தனித்தனியாக உரையாடினார். அவர் புறப்படுவதற்கு முன், அதிதிகள் பதிவேட்டில் தனது பாராட்டுக் குறிப்புகளை பதிவிட்டார்.

இராணுவ மகளிர் படையணியின் அதிகாரிகள், அதிகாரிகள் சிப்பாய்கள் பலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.