Header

Sri Lanka Army

Defender of the Nation

27th November 2023 09:03:54 Hours

‘பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு போட்டிகளில்’ இராணுவ விளையாட்டு வீர/வீராங்கனைகள் வெற்றி

12வது 'சம்பியன்ஷிப் விருது வழங்கல்' மற்றும் 'பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுகள் 22/23' இன் நிறைவு விழா வெள்ளிக்கிழமை (நவம்பர் 24) சுகததாச மைதானத்தில் கெளரவ. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் அவர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு பதவிநிலை பிரதானி, இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி மற்றும் விமானப்படைத் தளபதி ஆகியோர் கௌரவ அதிதிகளாக இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஒரு சுருக்கமான வரவேற்பு உரைக்குப் பிறகு சம்பியன்ஷிப் விருது வழங்கும் நிகழ்வு ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து பிரதம அதிதி அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு பதவிநிலை பிரதானி, இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி மற்றும் விமானப்படைத் தளபதி ஆகியோர் ஆகியோருடன் இணைந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்தார்.

2022-2023 ஆம் ஆண்டிற்கான 12 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை இராணுவம் 147 தங்கம், 144 வெள்ளி மற்றும் 112 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று ஒட்டுமொத்த சம்பியன்ஷிப்பை வென்றது.

இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை கடற்படை அணிகள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றன. இந்த பரிசளிப்பு விழாவில் குழு விளையாட்டு மற்றும் தனிப்பட்ட விளையாட்டு ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய 38 வெவ்வேறு பிரிவுகளில் தனிப்பட்ட வெற்றியாளர்கள் மற்றும் குழு வெற்றியாளர்களுக்கு கிண்ணங்கள் வழங்கப்பட்டன.

முப்படையினர் மற்றும் அழைப்பாளர்களும் இந்த நிகழ்வை பார்வையிட்டதுடன் முப்படையைச் சேர்ந்த கலைஞர்களால் நிகழ்வு வண்ணமயமாக்கப்பட்டது.