Header

Sri Lanka Army

Defender of the Nation

26th November 2023 10:34:24 Hours

23 வது காலாட் படைப்பிரிவினால் அனுசரனையாளரின் உதவியுடன் கர்ப்பிணிகளுக்கு போஷாக்கு பொதிகள் வழங்கல்

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 23 வது காலாட்படைப் பிரிவின் 233 வது காலாட்படை பிரிகேட் படையினர், வெலிகந்த பிரதேசத்தில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 80 கர்ப்பிணிப் பெண்களுக்கு போஷாக்கு பொதிகளை வழங்கும் சமூகத் திட்டத்தை வெலிகந்த கலாசார நிலையத்தில் வியாழக்கிழமை (நவம்பர் 23) முன்னெடுத்தனர்.

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் வேண்டுகோளுக்கு இணங்க, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இலங்கை தேசபக்தர் திரு.சமிந்த ஜயதிலக்க அவர்கள் தல ரூ. 7,500/= பெறுமதியான 80 பொதிகளுக்கு ரூ. 600,000/= வழங்கினார்.

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் கருத்தின் அடிப்படையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் 23 வது காலாட் படைப்பிரிவின் 233 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஏ.கே.சி.எஸ் டி சில்வா ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 9 வது இலங்கை பீரங்கி படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எம்.ஐ.எஸ் சந்திரகுமார யுஎஸ்பீ பீஎஸ்சி ஐஜி அவர்களால் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஒவ்வொரு பொதியிலும் தானியங்கள், கருவாடு, பால் மா பொதிகள், முட்டை, டின் மீன், மசாலாப் பொருட்கள், குழந்தைகளுக்கான பொருட்கள், சவக்காரம், சோயா மீட் போன்றவை இருந்தன.

இதேவேளை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்து விளங்கிய நெலும்வெவ மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் ஆதரவற்ற மாணவருக்கு புலமைப்பரிசில் மற்றும் பண உதவித்தொகையாக ஒவ்வொரு மாதமும் ரூபா.10,000.00 மாணவர் தனது உயர்தரப் பரீட்சையை முடிக்கும் வரை வழங்கப்படுகிறது. மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வேண்டுகேளுக்கிணங்க இணங்க திரு. ஜனித்பண்டார இதற்கான அனுசரணை பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மற்றும் கௌரவ அதிதியாக அனுசரணையாளர் திரு.சமிந்த ஜயத்திலக்க ஆகியோர் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.வி.என்.பீ.பிரேமரத்ன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சீ, 233 வது காலாட் பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், பிரதேசத்தில் உள்ள அரச அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.