Header

Sri Lanka Army

Defender of the Nation

25th November 2023 10:37:09 Hours

இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகம் ஒய்வுபெறும் இரு சிரேஷ்ட அதிகாரிகளுக்கு மரியாதை

இலங்கை இராணுவ தொண்டர் படையணி இரண்டு சிரேஷ்ட அதிகாரிகள் சேவையிலிருந்து ஓய்வு பெறுவதனை முன்னிட்டு 22 நவம்பர் 2023 அன்று இலங்கை இராணுவ தொண்டர் படை தலைமையகத்தில் அவர்களின் சேவையை கௌரவிக்கும் வகையில் கௌரவிக்கப்பட்டனர்.

இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் யூ.டி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ சார்பாக இலங்கை இராணுவ தொண்டர் படையணி பிரதி தளபதி எம்டீகேஆர் சில்வா கேஎஸ்பீ அவர்களினால் ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகளான கேணல் எம்ஐவீ பெர்னாண்டோ (ஓய்வு) மற்றும் கேணல் எஸ்ஏவை பெரேரா ஆகியோருக்கு சிறப்பு நினைவுச் சின்னங்களை வழங்கினார்.

கேணல் எம்ஐவீ பெர்னாண்டோ (ஓய்வு) 68 வது காலாட் படைப்பிரிவில் கேணல் ஒருங்கிணைப்பு அதிகாரியாக பணிபுரிந்தார். சிரேஷ்ட அதிகாரி 1991 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணி பாடநெறி 15 ஊடக இராணுவத்தில் இணைந்து கொண்டதுடன் 07 டிசம்பர் 1991 இல் இரண்டாம் லெப்டினன் நிலையில் இலங்கை இலேசாயுத காலாட் படையணிக்கு நியமிக்கப்பட்டார். அவரது இராணுவ வாழ்க்கையின் போது, அவர் பல்வேறு கட்டளை மற்றும் பணிநிலை நியமனங்களில் செயல்பாட்டு கடமைகளை செய்தார். சிரேஷ்ட அதிகாரி 29 செப்டம்பர் 2018 அன்று கேணல் நிலைக்கு உயர்த்தப்பட்டு 2023 நவம்பர் 10 அன்று ஓய்வு பெற்றார். எதிரியின் நேருக்கு நேர் அவரது சிறப்பான நடத்தைக்காக சிரேஷ்ட அதிகாரி ரண சூர பதக்கம் (ஆர்எஸ்பீ) பெற்றுள்ளார்.

கேணல் எஸ்ஏவை பெரேரா 1992 டிசம்பர் 30 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணியில் இணைந்து கொண்டதுடன்19 ஜூன் 1993 இல் இரண்டாவது லெப்டினனாக இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியில் நியமிக்கப்பட்டார். அவரது இராணுவ வாழ்க்கை முழுவதும் அந்தந்த நிலைகளில் ஒதுக்கப்பட்ட செயல்பாட்டு மற்றும் செயல்பாடு அல்லாத பகுதிகளில் கடமைகளைச் செய்துள்ளார். சிரேஷ்ட அதிகாரி இறுதியாக கேப்பாபிலவு உள்ள 59 வது காலாட் படைப்பிரிவில் சிவில் விவகார அதிகாரியாக பணியாற்றினார். சிரேஷ்ட அதிகாரி 10 ஒக்டோபர் 2023 அன்று கேணல் நிலைக்கு உயர்த்தப்பட்டதுடன் மேலும் அவர் 27 நவம்பர் 2023 முதல் ஓய்வு பெறுவார்.

பிரதி தளபதி மற்றும் அதிகாரிகள் ஒன்றுகூடி அவர்களின் ஓய்வுநாள் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் அவர்களின் எதிர்கால முயற்சிகளும் வெற்றிபெற வாழ்த்தினார்கள்.