Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd November 2023 15:31:54 Hours

பனாகொட மேற்குப் படையினருக்கு தளபதி உரை

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்குட்பட்ட பகுதிகளில் சேவையாற்றும் படையினரைச் சந்திக்கும் நோக்குடன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் புதன்கிழமை (நவம்பர் 22) காலை பனாகொட மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார்.

மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்களுடன் 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.ஏ.ஜே.என் ரணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் இணைந்து இராணுவத் தளபதியை அன்புடன் வரவேற்றனர்.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் படையினருக்கு உரையாற்றுகையில், போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடைய ஆபத்துக்கள் மற்றும் சமூகம் மற்றும் தனிநபர் முன்னேற்றம் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஆபத்துகள் தொடர்பாகவும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் எந்தவொரு சிப்பாய்க்கும் எதிராக அதிகபட்ச ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

நிறுவனத்தின் அனைத்து நிலையினருக்கும் மற்றும் அதிகாரிகளின் நலன்களுக்காக பன்முக நலன்புரி வசதிகள் உள்ளன. இராணுவத்தினருக்கு அந்த நன்மைகள் தொடர்பாக தெரியப்படுத்துவது அனைத்து அதிகாரிகளின் கடமையாகும் என இராணுவத் தளபதி தெரிவித்தார்.

அதேபோன்று, அன்றைய பிரதம அதிதி இராணுவத்தின் தற்போதைய மறுசீரமைப்பு செயல்முறைகளை மென் மேலும் மேம்படுத்தும் வகையில், அந்தந்த நிறுவனங்களில் கடமைகளை சுமூகமாக நடத்துவதற்கும், செயல்பாடு மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதையும் விளக்கினார்.

பல்வேறு சமூக விரோத செயல்களில் சிக்கிக் கொள்ளாமல், அனைத்து மட்டங்களிலும் ஒழுக்கத்தின் மிக உயர்ந்த தரத்தை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார், மேலும் அனைத்து நிலையினரும் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

படையினரின் உரையின் இறுதியில், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி, இராணுவத் தளபதிக்கு விசேட நினைவுச் சின்னத்தை வழங்கினார்.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கடமையாற்றும் படைப்பிரிவு தளபதிகள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் இவ்வுரையில் கலந்து கொண்டனர்.