Header

Sri Lanka Army

Defender of the Nation

21st November 2023 21:37:29 Hours

புதிய பிரதி பதவி நிலை பிரதானி இராணுவத் தலைமையகத்தில் கடமை பொறுப்பேற்று

இலங்கை இராணுவத்தின் சிரேஷ்டதுவத்தில் 3வது பதவியான பிரதிப் பதவி நிலை பிரதானியாக இலங்கை சிங்க படையணியின் மேஜர் ஜெனரல் ஜீ.ஆர்.ஆர்.பீ ஜயவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள், செவ்வாய்க்கிழமை (நவம்பர் 21) இராணுவத் தலைமையகத்தில் கடமைபொறுப்பேற்றார்.

மத அனுஷ்டானங்களின் பின்னர், இலங்கை சிங்க படையணியின் மேஜர் ஜெனரல் ஜீ.ஆர்.ஆர்.பீ ஜயவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பிரதிப் பதவி நிலை பிரதானியாக சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பணி நிலை அதிகாரிகளின் முன்னிலையில் புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொள்வதற்கான அதிகாரபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

இந்த புதிய நியமனத்திற்கு முன்னர், மேஜர் ஜெனரல் ஜீ.ஆர்.ஆர்.பீ ஜயவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவத்தின் உபகரண பணிப்பாளர் நாயகமாக பணியாற்றி வந்தார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், பணி நிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேஜர் ஜெனரல் ஜீ.ஆர்.ஆர்.பீ ஜயவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் சுருக்கமான விவரம்;

1968 டிசம்பர் 09 ஆம் திகதி பிறந்த இவர், கேகாலை மகா வித்தியாலயம் மற்றும் தெடிகம மகா வித்தியாலயத்தின் பெருமைக்குரியவர் ஆவர். இவர் பாடசாலை காலத்தில் படிப்பிலும், தடகளத்திலும் சிறந்து விளங்கி பாடசாலைக்கு புகழையும் பெருமையையும் சேர்த்தார்.

அவர் 1988 பெப்ரவரி 22 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் பயிலிளவல் அதிகாரி பாடநெறி 29 இல் இணைந்தார். தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற்கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், அவர் இரண்டாம் லெப்டினன் நிலையில் 1989 டிசம்பர் 16 இலங்கை சிங்க படையணியில் நியமிக்கப்பட்டார்.

அவரது இராணுவ வாழ்க்கையில் முழுவதும், கட்டளை , பணி நிலை மற்றும் பயிற்றுவித்தல் நியமனங்களில் பணியாற்றியுள்ளார், இது இலங்கை இராணுவத்தில் அந்தந்த நியமனங்களில் அவரது திறன்களை எடுத்துக்காட்டுகிறது. மே 2009 க்கு முன்னர் 22 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் மனிதாபிமான நடவடிக்கையின் போது போர் கடமைகளை வழங்குவதில் விதிவிலக்கான அர்ப்பணிப்புடன் அவர் விரிவாக உறுதியளித்துள்ளார்.

அவர் படையலகு புலனாய்வு அதிகாரி, நிறைவேற்று அதிகாரி, அணி- கட்டளையாளர் - 4 வது சிங்க படையணி, 4 வது மற்றும் 6 வது சிங்க படையணியில் 2 வது கட்டளை அதிகாரி, 8வது சிங்க படையணியல் கட்டளை அதிகாரி, லெபனான் ஐநா அமைதி காக்கும் 4 வது குழுவின் கட்டளை அதிகாரி, 542 வது மற்றும் 661 வது காலாட் பிரிகேட் தளபதி, 'நெலும்பொகுண' மஹிந்த ராஜபக்ஷ திரையரங்கின் பிரதம நிறைவேற்று அதிகாரி, சொத்து முகாமைத்துவ பணிப்பக பணிப்பாளர், காலாட் படை பயிற்சி நிலைய தளபதி, 57 வது படைப்பிரிவின் தளபதி, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி, மற்றும் இராணுவத்தின் உபகரண பணிப்பாளர் நாயகம் போன்ற பதவிகளை வகித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் ஜீ.ஆர்.ஆர்.பீ ஜயவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் படையலகு புலனாய்வு அதிகாரிகளின் பாடநெறி, அதிகாரிகளின் வழங்கல் மற்றும் நிர்வாக பாடநெறி, இளம் அதிகாரிகளின் பாடநெறி, உளவியல் நடவடிக்கை பாடநெறி, சாத்தியமான அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் பாடநெறி போன்ற இராணுவ பயிற்சி திட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றார். மோர்டார் கோர்ஸ் - இந்தியா, இளம் அதிகாரிகள் பாடநெறி, பாகிஸ்தான் மத்திய தொழிலாண்மை பாடநெறி சீனா மற்றும் படையலகு கட்டளை பாடநெறி பாகிஸ்தான் போன்றவற்றையும் கற்றுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட அதிகாரி மனித வள முகாமைத்துவத்தில் நிறைவேற்று பட்டபடிப்பு , கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்தில் தொழில் மற்றும் உலக விவகாரங்களுக்கான பட்டபடிப்பு, மோதல் தீர்வுக்கான பட்டபடிப்பு போன்ற பல உயர் கல்வி மற்றும் இராணுவ சாராத பாடநெறிகளையும் பின்பற்றியுள்ளார். மற்றும் சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையத்தில் திறன் அபிவிருத்தி, கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித வள முகாமைத்துவத்தில் முதுகலைப் பட்டம் மற்றும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கைகளில் முதுகலைப் பட்டம்பெற்றுள்ளார்.

அவர் பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத்தின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார், அங்கு அவர் தேசிய பாதுகாப்பு மற்றும் போர் ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

சிரேஷ்ட அதிகாரி, எதிரிகளை எதிர்கொள்ளும் அவரது சிறப்பான நடத்தைக்காக 'ரண விக்கிரமபதக்கம்' மற்றும் 'ரண சூரபதக்கம்' ஆகிய விருதுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளார்.

அவர் கிழக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம், வடக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம், பூர்ண பூமி பதக்கம், வடக்கு மற்றும் கிழக்கு நடவடிக்கை பதக்கம் மற்றும் ரிவிரேச் சேவை பதக்கம் ஆகியவற்றின் பதக்கங்களைப் பெற்றவர். மேலும், அவர் 1998 இல் 50 வது சுதந்திர ஆண்டு பதக்கம், 1999 இல் இலங்கை இராணுவத்தின் 50 வது ஆண்டு பதக்கம், 2023 இல் 75 வது சுதந்திர தின நினைவுப் பதக்கம், இலங்கை ஆயுத சேவைகள் நீண்ட சேவை பதக்கம், சேவாஅபிமானி பதக்கம், சேவை பதக்கம் என்பனவற்றையும் கொண்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் ஜீ.ஆர்.ஆர்.பீ ஜயவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியும் இவர் திருமதி ஒமிலா ஜயவர்த்தனவை மணந்து ஒரு மகளுக்கு தந்தையும் ஆவார்.