Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd November 2023 20:45:22 Hours

ஓய்வு பெறும் கஜபா படையணியின் மூன்று சிரேஷ்ட அதிகாரிகள் கௌரவிப்பு

சாலியபுர கஜபா படையணியில் சிரேஷ்ட அதிகாரிகளான மேஜர் ஜெனரல் சீடி ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, பிரிகேடியர் எல்.ஜே.எல்.பி உடுவிட்ட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ மற்றும் பிரிகேடியர் ஜேபீ விதானாச்சி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆகிய மூவருக்கும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 3) இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்று செல்லும் முன் பிரியாவிடை வழங்கப்பட்டது.

மேஜர் ஜெனரல் சீடி ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் ஓய்வுபெறும் போது இராணுவத்தின் பிரதி பதவி நிலை பிரதானியாக கடமையாற்றினார். பிரிகேடியர் எல்.ஜே.எல்.பி உடுவிட்ட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் 121 வது காலாட் பிரிகேட்டின் பிரிகேட் தளபதியாகவும், பிரிகேடியர் ஜேபீ விதானாச்சி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் முகாமைத்துவ மற்றும் பராமரிப்பின் பணிப்பாளராக கடமையாற்றினார்.

சாலியபுர கஜபா படையணி தலைமையக வளாகத்தில் இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைவாக இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ, காலாட் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கே.பீ.எஸ்.ஏ பெர்னாண்டோ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, இராணுவப் போர்க் கல்லூரியின் தளபதியான மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி. உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்துகொண்டனர்.

கஜபா படையணியின் ஸ்தாபகத் தந்தை மறைந்த மேஜர் ஜெனரல் விஜயவிமலரத்னவின் திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தப்படுவதற்கு முன், சம்பிரதாயத்திற்கு அமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதைகள் வழங்கப்பட்டன.

கஜபா படையணியின் பிரதி நிலைய தளபதி கேணல் கே.ஆர். கலுபஹன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகளுடன் தனித்தனியாக சிரேஷ்ட அதிகாரிகள் வரவேற்கப்பட்டதுடன், கஜபா படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் எச்.டி.டபிள்யூ வித்யானந்த ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களால் அணிவகுப்பு மைதானத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். மூவரும் படையினருக்கு உரையாற்றினர்.

இந்நாளில் நினைவுகளைச் சேர்க்கும் வகையில், வெளியேறும் சிரேஷ்ட அதிகாரிகள் படையணியின் ஊழியர்களுடன் குழு படம் எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் சம்பிரதாயங்களின் ஒரு பகுதியாக படையணி தலைமையகத்தில் படையினர் உணவகத்தில் அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரம் வழங்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை மாலை படையணியின் அதிகாரிகள் உணவகத்தில் இராணுவ பாணியிலான இரவு உணவு விருந்துபசாரத்தடன் அன்றய நிகழ்வுகள் முடிவடைந்தன.