Header

Sri Lanka Army

Defender of the Nation

27th October 2023 09:01:35 Hours

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.முனசிங்க அவர்களின் சேவைக்கு பாராட்டு

உபகரண சேவை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ போர்கருவி படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.முனசிங்க ஆர்எஸ்பீ எடீஓ அவர்கள் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றும்செல்வதற்கு முன்னர் வியாழக்கிழமை (ஒக்டோபர் 26) குடும்ப உறுப்பினர்களுடன் இராணுவ தளபதியின் கோரிக்கையின் பேரில் தளபதியின் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 33 வருடங்களுக்கும் மேலாக சேவை செய்து ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியுடனான உரையாடல்களின் போது நேசத்துக்குரிய நினைவுகள் மற்றும் குறிப்பிடத்தக்க சாதனைகள் நிறைந்த அவரது அயராத அர்ப்பணிப்புகளுக்காக அவரைப் பாராட்டினார். ஒரு வழங்கல் அதிகாரியாக அமைப்பின் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் பிற நடைமுறைத் தேவைகளை மேம்படுத்த அவர் மேற்கொண்ட அவரது திறமைகள் மற்றும் முயற்சிகள் குறித்தும் இராணுவத் தளபதி உயர்வாகப் பேசினார்.

மேஜர் ஜெனரல் ஜி.ஏ.முனசிங்க ஆர்எஸ்பீ எடீஓ அவர்கள் இராணுவத் தளபதிக்கு அன்பான அழைப்புக்கு நன்றி தெரிவித்ததுடன், இராணுவத்தில் தனது பல்வேறு கடமைகளை நிறைவேற்றுவதில் தளபதி அவருக்கு வழங்கிய வழிகாட்டுதலுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்ட அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சில எண்ணங்களை பகிர்ந்து கொண்ட இராணுவத் தளபதி, ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் எதிர்கால முயற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் வினாவினார். அத்துடன் இராணுவத் தளபதி சிரேஷ்ட அதிகாரிக்கு அவரது குடும்ப உறுப்பினர்களால் அவரது வாழ்க்கை முழுவதும் வழங்கப்பட்ட விலைமதிப்பற்ற ஆதரவைப் பாராட்டினார்.

கலந்துரையாடலின் முடிவில் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களால் ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டு மற்றும் பாராட்டு சின்னமாக சிறப்பு நினைவுச் சின்னம் மற்றும் குடும்பத்தினருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான வரலாறு பின்வருமாறு :-

மேஜர் ஜெனரல் ஜி.ஏ.முனசிங்க ஆர்எஸ்பீ எடீஓ அவர்கள் 1989 நவம்பர் 14 இல் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் பயிலிளவல் அதிகாரியாக இணைந்து கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரி மற்றும் தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி ஆகியவற்றில் பாடநெறி 34 பீ இல் அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றார். அவர் இரண்டாவது லெப்டினன் பதவியில் 1991 நவம்பர் 14 அன்று இலங்கை இராணுவ போர் கருவி படையணியில் நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் பணிபுரிந்த காலத்தில் அடுத்தடுத்த பதவிகளுக்கு சீராக உயர்த்தப்பட்ட பிறகு, 19 ஒகஸ்ட் 2023 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.

அவர் ஓய்வுபெறும் போது இராணுவ தலைமையகத்தின் போர் கருவி பணிப்பாளர் நாயகம் மற்றும் இலங்கை இராணுவ போர்கருவி படையணி படைத்தளபதி ஆகிய பதவிகளை வகிக்கின்றார். 9 வது காலாட் பிரிகேடின் உள்ளக பாதுகாப்பு படையலகு அணி கட்டளையாளர், திருகோணமலை முன்னரங்க ஆயுதக் கழஞ்சிய கட்டளை அதிகாரி, 51 வது காலாட் படைப்பிரிவு கழஞ்சிய அதிகாரி கட்டளை, திட்டமிடல் பணிப்பக பணிநிலை அதிகாரி 2, போர் கருவி பணிப்பாளர் நாயக கிளையின் பணிநிலை அதிகாரி 3, வன்னி பாதுகாப்பு படை தலைமையக பணிநிலை அதிகாரி 2 (வழங்கல்), ஹைட்டியில் ஐ. நா அமைதி காக்கும் படையில் வெடிபொருள் நுட்ப அதிகாரி மற்றும் போர்கருவி அதிகாரி யாழ். பாதுகாப்பு படை தலைமையக பணிநிலை அதிகாரி 1 (வழங்கல்), போர்கருவி படையணி பயிற்சி பாடசாலைதளபதி, 3 வது இலங்கை இராணுவ போர்கருவி படையணியின் கட்டளை அதிகாரி, 19ன் பிரிவு தளபதி, 54 வது காலாட் படைப்பிரிவு கேணல் (நிர்வாகம் மற்றும் விடுதி), அக்குரேகொட பாதுகாப்பு தலைமையக வளாக கொள்வனவு குளுத் தலைவர், ராகமை போர் கருவிகள் தள ஆலை தளபதி, இலங்கை இராணுவ போர்கருவி படையணியின் நிலைய தளபதி மற்றும் போர்கருவி சேவைகள் பணிப்பக பணிப்பாளர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.

போர்க்களங்களில் அவரது வீரம் மற்றும் எதிரிகளை எதிர்கொள்ளும் அவரது சிறந்த துணிச்சலுக்காக ரண சூர (ஆர்எஸ்பீ) பதக்கத்தினால் அலங்கரிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் ஜி.ஏ.முனசிங்க அவர்கள் தனது இராணுவ வாழ்க்கையில் பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாடநெறிகளைப் பின்பற்றியுள்ளார். அவற்றில் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் ஆடை ஆய்வகம், இலங்கை துறைமுக அதிகாரசபையின் அபாயகரமான பொருட்களை அடையாளம் காண்பதற்கான பயிற்சி, இளம் அதிகாரிகள் பாடநெறி- பாகிஸ்தான், இடைநிலை தொழிலாண்மை பாடநெறி – பாகிஸ்தான், வெடிமருந்து தொழில்நுட்ப அதிகாரிகளின் பாடநெறி - பாகிஸ்தான், சிரேஷ்ட அதிகாரிகளின் முகாமைத்துவ பாடநெறி- இந்தியா, , உயர் ஆயுத முகாமைத்துவ பாடநெறி – இந்தியா என்பவற்றை குறிப்பிடலாம்.

மேலும் சிரேஷ்ட அதிகாரி ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரியில் இளங்கலை (பாதுகாப்பு ஆய்வுகள்) பட்டம் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்தில் இராஜதந்திரம் மற்றும் சர்வதேச உறவுகள் பாடநெறி போன்ற பல உயர் கல்வி மற்றும் இராணுவம் அல்லாத தகுதிகளையும் பெற்றுள்ளார். .