Header

Sri Lanka Army

Defender of the Nation

26th September 2023 21:56:09 Hours

கடற்படை பணிநிலை அதிகாரி பாடநெறி அதிகாரிகள் முல்லைத்தீவு விஜயம்

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்வியற்கல்லூரியில் இளம் கடற்படை பணிநிலை அதிகாரி பாடநெறி – 38ஐ பின்பற்றும் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை மாணவ அதிகாரிகள் சனிக்கிழமை (செப். 23) முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம் கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியு சார்பாக முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் எஸ்டிபீசி ஆரச்சிகே மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் அவர்களை வரவேற்றதுடன், லெப்டினன் கேணல் டிடீஎம்டீஎஸ் மீகொல்ல அவர்களினால் மே 2009 க்கு முன்னர் நடத்தப்பட்ட மனிதாபிமான நடவடிக்கை மற்றும் அதன் வெற்றிக்கு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம் எவ்வாறு பங்களித்தது என்பதை விளக்குவதற்கு முன்பு பார்வையாளர்களுக்கு அவர்களின் பங்கு மற்றும் பணிகள் குறித்து விளக்கினார்.

புதுக்குடியிருப்பு, 68 வது காலாட் படைப்பிரிவுக்கு விஜயம் செய்த அவர்கள், வெற்றி நினைவுச் சின்னத்தையும், புலிகளின் பழைய நீர்மூழ்கிக் கப்பல் தளத்தையும் பார்வையிட்டனர்.

அவர்கள் புறப்படுவதற்கு முன் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மற்றும் 68 வது காலாட் படைப்பிரிவின் தளபதிக்கு சிறப்பு நினைவு சின்னங்ளை வழங்கினார்கள்.