Header

Sri Lanka Army

Defender of the Nation

21st July 2023 22:09:15 Hours

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் சாதனையாளர்களுக்கு பதவி உயர்வு மற்றும் விருதுகள்

தாய்லாந்தில் சமீபத்தில் நடைப்பெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் – 2023, பாரிஸில் நடைப்பெற்ற பொதுநலவாய உலக சாம்பியன்ஷிப் - 2023 மற்றும் இந்தியாவில் நடைப்பெற்ற பொதுநலவாய சிரேஷ்ட, கனிஷ்ட இளையோர் சாம்பியன்ஷிப் – 2023 போட்டிகளில் சாதனை படைத்த இராணுவ வீரர்களுக்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களால் இன்று (ஜூலை 21) காலை நிலை உயர்த்தப்பட்டதுடன், பாராட்டுக்குரிய முக்கியத்துவம் வாய்ந்த விருந்தும் வழங்கப்பட்டது.

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் தடகள சாதனையாளர்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன், போட்டிகளில் போது அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்து அவர்களின் சாதனைகளைப் பாராட்டினார்.

2 வது (தொ) இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சார்ஜென்ட் எச்கேகே குமாரகே, 6 வது இராணுவ பீரங்கி படையணியின் பொம்பார்டியர் எஸ்ஏ தர்ஷன, இராணுவ மகளிர் படையணியின் கோப்ரல் என். ராமநாயக்க மற்றும் கோப்ரல் எச்எல்என்டி லேகம்கே, 2 வது (தொ) இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் லான்ஸ் கோப்ரல் ஆர்எம்ஆர்என் ராஜகருனா, 6 வது இராணுவ பீரங்கி படையணியின் லான்ஸ் பொம்பார்டியர் பீஎம்பீஎல் கொடிகார, 6 வது இராணுவ பீரங்கி படையணியின் கன்னர் ஜீடிகேகே நிகு மற்றும் இராணுவ மகளிர் படையணியின் சிப்பாய் டிஆர்எச் குரே ஆகியோருக்கு இராணுவத் தளபதியினால் பாராட்டுக்கள் வழங்கப்பட்டன. .

பொதுநலவாய சிரேஷ்ட, கனிஷ்ட இளையோர் சாம்பியன்ஷிப் – 2023 மற்றும் 2023 உலக தடகள சாம்பியன்ஷிப் இல் சிறந்து விளங்கிய 15 வது இராணுவ பீரங்கி படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி II ஏஜிஎஸ் அபேவிக்ரம, இராணுவ பொலிஸ் படையணியைச் சேர்ந்த பணிநிலை சார்ஜென்ட் கேஏஎஸ் துலான் முறையே நிலை உயர்த்தப்பட்டு, பாராட்டு மற்றும் நினைவு சின்னங்களும் வழங்கப்பட்டன.

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ, முல்லைத்தீவு முன்னரங்கு பராமரிப்பு பகுதியின் தளபதியும் இலங்கை இராணுவ பளு தூக்கும் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் எம்டபிள்யூடிசி மெத்தானந்த யுஎஸ்பீ என்டிசி, 62 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் இராணுவ தடகள குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் ஆர்ஏஜெஎன் ரணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ, ஊடக பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஐஎச்எம்ஆர்கே ஹேரத் யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, விளையாட்டுப் பணிப்பகத்தின் பணிப்பாளர் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஆகியோர் தளபதி அலுவலகத்தில் இடம்பெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்டனர்.