Header

Sri Lanka Army

Defender of the Nation

17th July 2023 21:31:26 Hours

இயந்திரவியல் காலாட் படையணியின் படைத்தளபதி 3 வது இயந்திரவியல் காலாட் படையணிக்கு விஜயம்

இயந்திரவியல் காலாட் படையணியின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் எச்எம்யூ ஹேரத் ஆர்டபிள்யூ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ எச்டிஎம்சி பீஎஸ்சீ அவர்கள் 3 வது இயந்திரவியல் காலாட் படையணிக்கு 2023 ஜூலை 10 விஜயம் மேற் கொண்டார்.

3 வது இயந்திரவியல் காலாட் படையணியின் படையினரால் வருகை தந்த படையணியின் படைத்தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து 3 வது இயந்திரவியல் காலாட் படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் எச்எம்ஜேபீ ஹீன்கெந்த அவர்களால் படையணியின் தற்போதைய வகிப்பங்கு மற்றும் பணிகள் தொடர்பான விரிவான விளக்கம் வழங்கப்பட்டது.