Header

Sri Lanka Army

Defender of the Nation

17th July 2023 21:36:38 Hours

24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மீள் உருவாக்கப்பட்ட 243 காலாட் பிரிகேட்டுக்கு விஜயம்

மட்டக்களப்பு கல்லடி 231 வது காலாட் பிரிகேட், 243 வது காலாட் பிரிகேட் என மீள் பெயரிடப்பட்டதை அடுத்து 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் அங்கு புதன்கிழமை (ஜூலை 12) விஜயம் செய்தார்.இதன் போது 11 வது இலங்கை சிங்க படையணிக்கும் விஜயம் மேற் கொண்டார்.

தளபதியின் வருகையின் போது 243 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டபிள்யூஎம்என்கேடி பண்டார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களால் வரவேற்கப்பட்டது. பிரதம அதிதிக்கு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அவரது முதல் வருகையின் நினைவாக வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. 243 வது காலாட் பிரிகேடின் தளபதி பிரிகேடியர் டபிள்யூஎம்என்கேடி பண்டார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களால் வகிபங்கு மற்றும் பணிகள் பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது.

243 வது காலாட் பிரிகேட் தலைமையக விஜயத்தின் முடிவில், 11 வது இலங்கை சிங்க படையணி முகாமுக்குச் சென்று படையினருக்கு உரையாற்றினார். பின்னர் விருந்தினர் பதுவேட்டுப் புத்தகத்தில் பாராட்டுக் குறிப்புகளையும் பதிவிட்டார்.

24 வது காலாட் படைப்பிரிவு, 243 காலாட் பிரிகேட் மற்றும் 11 (தொ) இலங்கை சிங்கப் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.