Header

Sri Lanka Army

Defender of the Nation

16th July 2023 18:27:23 Hours

ஓய்வு பெறும் இராணுவ பதவி நிலை பிரதானிக்கு இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் கௌரவிப்பு

ஓய்வுபெறும் இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுக்கு ஓய்வு பெறுவதன் நிமித்தம் பனாகொடை இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 14) இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர் பிரியாவிடை வழங்கினர்.

முதலில் நுழைவாயிலில் அன்றைய பிரதம அதிதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதனை தொடர்ந்து யாழ். பாதுகாப்பு படை தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் ஆர் கே ஹெட்டியாரச்சி ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சீ மற்றும் இலங்கை இலேசாயுத காலாட் படையணி நிலைய தளபதி கேணல் எம்பீஎஸ்பீ குலசேகர டப்ளியுடப்ளியுவீ ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ ஆகியோர் வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து இலங்கை இலேசாயுத காலாட் படையணி அணிவகுப்பு மைதானத்தில் படையினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதனை தொடர்ந்து இலங்கை இலேசாயுத காலாட் படையணி போர் நினைவு தூபிக்கு முன்னால் சில குழு படங்களையும் எடுத்துகொண்டார். பின்னர் படையினருக்கு ஆற்றிய உரையில் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துடன் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்தின் போதும் அவர்களுடன் உரையாடினார்.

மாலையில் இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையக அதிகாரிகளின் உணவகத்தில் ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு பிரியாவிடை இரவு விருந்து அளிக்கப்பட்டது. அந் நிகழ்வின் போது மேஜர் ஜெனரல் எஸ் ஆர் கே ஹெட்டியாரச்சி ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சீ அவர்களினால் மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுக்கு அனைத்து இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர் சார்பாக நினைவுசின்னம் வழங்கப்பட்டது.

மேலும் இந் நிகழ்வில் வெளியேறும் தளபதியின் துணைவியாரும் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியுமான திருமதி தனுஷா வீரசூரிய மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளின் துணைவியர்களும் கலந்துகொண்டனர்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி வளாகத்தை விட்டு வெளியேறும் முன் இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் சில எண்ணங்களையும் பாராட்டு குறிப்புகளையும் எழுதினார். மேலும் இந் நிகழ்வுகளில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய் பங்குபற்றினர்.