Header

Sri Lanka Army

Defender of the Nation

05th July 2023 19:28:42 Hours

24 வது காலாட் படைப்பிரிவினர் சுற்றுலா குடுத்பத்திற்கு உதவி

24 வது காலாட் படைப்பிரிவு தலைமையகம், தலைமையகத்தில் பணியாற்றும் வீரர்களின் ஏகபோக கடமைப் பாத்திரங்களுக்கு வினோதம் அளிக்கும் வகையில் வியாழக்கிழமை (30 ஜூன் 2023) அன்று அம்பாறை பிராந்தியம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் பகுதிகளுக்கு படையினரின் குடும்ப உறுப்பினர்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல உதவியது.

அதன்படி முதலில் முஹுது மகா விகாரைக்கு 14 இராணுவத்தினர் தமது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அன்புக்குரியவர்களை அழைத்துச் செல்வதற்கு வசதி செய்து கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பங்கேற்பாளர்கள் அனைவரும் அருகம்பே கடற்கரைப் பகுதிக்கு சென்றனர், அங்கு அவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். அதேபோல் கடற்கரையில் அவர்கள் அனைவரும் சுவையான தின்பண்டங்களையும் உணவையும் சுவைத்தனர்.

மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி இந்த நிகழ்வைத் திட்டமிட்டு, குழுப்பணியை வலுப்படுத்துதல், படையினரின் பணி அழுத்தத்தைப் போக்குதல், சீரான தன்மையிலிருந்து திசைதிருப்புதல் மற்றும் படையினர் மற்றும் அவர்களது அன்புக்குரியவர்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு வினோத பயணத்தை வழிநடத்தினார்.