Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd July 2023 21:26:17 Hours

இராணுவத்தால் முல்லைத்தீவில் வீடற்ற குடும்பத்திற்கு வீடு

முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழுள்ள 6 வது கெமுனு ஹேவா படையணி படையினரின் முயற்சியின் விளைவாக முல்லைத்தீவு வள்ளுவர்புரத்தில் வறிய குடும்பத்திற்கு புதிய வீடு ஒன்று நிர்மாணிக்கப்பட்டதுடன் முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியு அவர்கள் வியாழன் (ஜூன் 29) அன்று இவ் வீட்டின் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

பயனாளி திருமணமாகி மூன்று குழந்தைகளுடன் பொருளாதாரக கஷ்டங்களுக்கு மத்தியில் வாழும் நிலை படையினரால் கவனிக்கப்பட்டது. 68 வது படைப்பிரிவின் தலைமையகத்தின் வேண்டுகோளின் பேரில், அப்பகுதியில் உள்ள பல நன்கொடையாளர்கள், மற்றும் நலன் விரும்பிகள் வளங்களுக்கான செலவை ஏற்றதுடன் 6 வது கெமுனு ஹேவா படையணி படையினர் வீட்டைக் கட்டுவதற்கு அவர்களின் தொழில்நுட்ப திறன்கள் மற்றும் மனிதவளத்தை வழங்க முன்வந்தனர்.

இத் திட்டம் முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக தளபதியின் ஆலோசனைப்படி 68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிக்காட்டலில் தொடங்கப்பட்டது. 681 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் என்டிபீ குணதுங்கவின் மேற்பார்வையின் கீழ் 6 வது கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரி மேஜர் எஸ்எல்டப்ளியூ திஸாநாயக்க மற்றும் அவரது படையினர் தேவையான தொழில் நிபுணத்துவம் மற்றும் மனிதவளத்தை வழங்கி சில வாரங்களில் திட்டத்தை நிறைவு செய்தனர்.

பயனாளியின் உறவினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், வீட்டைக் கட்டிய சிப்பாய்கள் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் முன்னிலையில், சமய சடங்குகள் மற்றும் சடங்குகள் நிறைந்த விழாவில் வீடு பயனாளிக்கு கையளிக்கப்பட்டது.