Header

Sri Lanka Army

Defender of the Nation

24th June 2023 18:10:15 Hours

இலங்கை வாகனப் பொறியியலாளர்கள் நிறுவனத்தின் செயலமர்விற்கு இராணுவ நிபுணர்கள் அழைப்பு

இலங்கை வாகனப் பொறியியலாளர்கள் நிறுவனம் ஏற்பாடு செய்த வருடாந்த கருத்தரங்கு இலங்கை இராணுவத்தின் பிரதிநிதிகள் உட்பட நாடளாவிய ரீதியில் பல நிபுணர்கள், பொறியியலாளர்கள் மற்றும் ஆய்வாளர்களின் பங்குபற்றுதலுடன் சனிக்கிழமை (மே 27) சுற்றுலா சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

'தொழில்நுட்ப முகாமை' என்ற கருப்பொருளின் கீழ் இச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டதுடன், 'வாகன தொழிட்துரையின் தொழில்துறையின் போட்டித்திறன்', 'பொருளாதாரத்தை மறுவடிவமைப்பதில் தொழில்நுட்பத்தின் பங்கு' ஆகிய தலைப்புகளின் கீழ் தொழில்நுட்பத்தின் அண்மைக்கால முன்னேற்றங்கள் மற்றும் பொறியியல் துறையின் சவால்களை விவாதிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. 'வாகனங்களின் விபத்து பாதுகாப்பு'. பல்வேறு பொறியியல் துறைகளின் விரிவான விடயப் பரப்புக்காக அறியப்படும் வருடாந்த செயலமர்வு, கல்வித்துறை, தொழில்துறை மற்றும் அரசு உட்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த பங்கேற்பாளர்களை இந் நிகழ்ச்சி ஈர்த்தது.

வாகனப் பொறியியல் மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில் இலங்கை இராணுவத்தின் பெறுமதியான பங்களிப்பை அங்கீகரித்து, ஊக்குவிப்பதில் இராணுவம் மற்றும் சிவில் துறைகளுக்கு இடையே உள்ள நெருக்கமான ஒத்துழைப்பை நன்கு நிரூபிக்கும் வகையில், செயலமர்வின் போது விரிவுரைகளை வழங்கவும் அவர்களின் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ளவும் இலங்கை வாகனப் பொறியியலாளர்கள் நிறுவனம் புகழ்பெற்ற இராணுவ வீரர்களை அழைத்தது.

இலங்கை சமிஞ்சை படையணியின் நிலைய தளபதி கேணல் வைகேஎஸ் ரங்கிக பீஎஸ்சி பீடிஎஸ்சி, இயந்திர பொறியியல் நிபுணரான அவர் இராணுவம் மற்றும் சிவில் பொறியியல் சமூகங்களுக்கு இடையே அதிக ஒத்துழைப்பையும் அறிவையும் வளர்க்கும் வகையில் ‘பொருளாதாரத்தை மறுவடிவமைப்பதில் தொழில்நுட்பத்தின் பங்கு’ என்ற தலைப்பில் ஒரு விரிவுரை நடத்தினார். யோசனைகள் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றின் பரிமாற்றம் இலங்கையில் பொறியியல் துறையில் மேலும் முன்னேற்றங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச் செயலமர்வின் திட்டத் தலைவராக மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் ஜெனரல் மேஜர் ஜெனரல் ஜேஏஆர்எஸ்கே ஜயசேகர யூஎஸ்பீ பீஎஸ்சி, இருந்தார். இராணுவத் தளபதியான லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுக்கு இலங்கை வாகனப் பொறியியலாளர்கள் நிறுவனம் தனது நன்றியைத் தெரிவித்தது. செயலமர்விற்கு அவர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பிற்காக இலங்கை இராணுவம் மற்றும் பொறியியல் நடைமுறைகளில் சிறந்து விளங்குவதற்கான இராணுவத்தின் அர்ப்பணிப்பை அங்கீகரித்தது. ஏற்பாடுகளில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.