Header

Sri Lanka Army

Defender of the Nation

21st June 2023 20:08:27 Hours

231 வது காலாட் பிரிகேட்டினரால் முதியோர் இல்லத்திற்கான பூச்சிக் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் அன்பளிப்பு

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 23 வது காலாட் படைப்பிரிவின் 231 வது காலாட் பிரிகேட் படையினர் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 4) ஐக்கிய இராச்சியம் அனுசரனையாளாரான திரு. நிஷாந்தன் மற்றும் மட்டக்களப்பு மீன் பாடும் லயன்ஸ் கழகத்தினர் இணைந்து வழங்கிய அனுசரணையுடன் Little Sisters of the Poor’ முதியோர் இல்லத்திற்கு 4 பூச்சிக் கட்டுப்பாட்டு இயந்திரங்களை அன்பளிப்பு செய்தனர்.

231 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டபிள்யூஎம்என்கேடி பண்டார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் முதியோர் இல்லத்திற்குச் சென்று, தலா 76,000/= பெறுமதியான இயந்திரங்களை நன்கொடையாக வழங்கினார்.

இந்த முதியோர் இல்லத்தில் 25 ஆண்களும் 25 பெண்களும் வசிப்பதுடன், நன்கொடை நிகழ்ச்சியின் முடிவில், இராணுவ கலிப்சோ இசைக்குழுவின் இசை மற்றும் மெல்லிசைகளை வழங்கி பெரியவர்களை மகிழ்வித்தனர்.

231 வது காலாட் பிரிகேடின் சிவில் அலுவல்கள் அதிகாரி, 4 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி, உதவி பொலிஸ் அத்தியட்சகர் - மட்டக்களப்பு, மீன் பாடும் லயன்ஸ் கழகத்தின் பிரதிநிதிகள், அதிகாரிகள் மற்றும் 231 காலாட் பிரிகேட் படையினர் ஆகியோர் நன்கொடை நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.