Header

Sri Lanka Army

Defender of the Nation

18th June 2023 21:30:02 Hours

இலங்கை இராணுவப் பொறியியல் பாடசாலையில் 5 வது வெடிகுண்டு மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிமருந்துகளை அகற்றல் பாடநெறி நிறைவு

5 வது வெடிகுண்டு மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிமருந்துகளை அகற்றல் பாடநெறி வியாழக்கிழமை (ஜூன் 15) எம்பிலிப்பிட்டிய இலங்கை இராணுவப் பொறியியல் பாடசாலையில் நிறைவு பெற்றது.

நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கை இராணுவ பிரதம களப் பொறியியலாளர் மேஜர் ஜெனரல் எஎச்எல்ஜி அமரபால ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் கலந்து கொண்டு பாடநெறிக்கான பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

இலங்கைப் பொறியியல் படையணியின் 03 அதிகாரிகள் மற்றும் 24 சிப்பாய்களின் பங்கேற்புடன் வெடிகுண்டு மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிமருந்துகளை அகற்றல் பாடநெறி பெப்ரவரி 06 ஆம் திகதி தொடக்கம் ஜூன் 15 ஆம் திகதி வரை நடைபெற்றதுடன், அடிப்படை இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி பற்றிய 14 நாள் பயிற்சியையும் உள்ளடக்கியிருந்தது.

அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் தரவரிசை அடிப்படையில் முறையே 10 வது இலங்கைப் பொறியியல் படையணியின் கேப்டன் டிஜிஎச்எம் கருணாரத்ன மற்றும் 9 வது இலங்கைப் பொறியியல் படையணியின் கோப்ரல் எம்எம்எம்எம் மராசிங்க ஆகியோர் பாடநெறியில் முதல் இடத்தைப் பெற்றனர். பிரதம விருந்தினர் நிறைவுரையை வழங்குவதற்கு முன்னர் வெடிபொருள் அகற்றல் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

இலங்கைப் பொறியியல் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்எ குலதுங்க ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சி, இலங்கைப் பொறியியல் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் எம்பிகே மதுரப்பெரும ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி, இலங்கை இராணுவப் பொறியியல் பாடசாலையின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டனர்.