Header

Sri Lanka Army

Defender of the Nation

27th February 2023 09:58:00 Hours

68 வது படைப்பிரிவின் தளபதியின் உத்தியோக பூர்வ விஜயம்

68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ரொஹான் பொன்னம்பெரும, அவர்கள் 68 வது காலாட் படைப்பிரிவின் கீழ் இயங்கும் அமைப்புக்களுக்கு புதன்கிழமை (பெப்ரவரி 22) விஜயம் செய்தார்.

அவர் முதலில் 59 காலாட் படைபிரிவு, படையலகு, பயிற்சிப் பாடசாலைக்கு சென்று பயிற்சியில் இருக்கும் 9 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினர்களுக்கு உரையாற்றினார். பின்னர், 682 வது காலாட் பிரிகேட் முகாமுக்கு வருகை தந்த அவரை 682 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரொஹான் விக்கிரமசிங்க அவர்கள் மரியாதையுடன் வரவேற்று, அங்கு படையினர் மத்தியில் உரையாற்றியதுடன், தளபதி தேநீர் உபசாரத்திலும் கலந்து கொண்டார்.

இறுதியாக, 681 வது காலாட் பிரிகேடிற்கு விஜயம் செய்த அவரை 681 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் தம்மிக்க குணதுங்க அவர்கள் வரவேற்றார். தளபதியவர்கள் படையினருக்கு உரையாற்றியதுடன், தனது வருகையின் நினைவம்சமாக சந்தன மரக்கன்றினையும் நட்டார்.