Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd March 2023 17:10:08 Hours

572 வது பிரிகேடின் 16 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சமூக நலத்திட்டங்கள்

முல்லைத்தீவு, விசுவமடு 572 வது காலாட் பிரிகேட் தலைமையகம் பெப்ரவரி 27-28 ஆம் திகதிகளில் 572 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் துஷான் விமலசேன அவர்களின் வழிகாட்டலின் கீழ் தனது 16 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.

ஆண்டு நிறைவு நாளுக்கு முன்னதாக சிவில் சமூக நலம் சார்ந்த திட்டமாக ஞாயிற்றுக்கிழமை (26) தர்மபுரத்தில் உள்ள 'நமசிவாய' முதியோர் இல்ல வளாகத்தை துப்புரவு செய்த படையினர் மறுநாள் (27) முதியோர் இல்ல பெரியவர்களுக்கு மதிய உணவை வழங்கினர்.

ஆண்டு நிறைவு நாளில் (28) 572 வது காலாட் பிரிகேட் தளபதி, இராணுவத்தினரால் அன்புடன் வரவேற்கப்பட்டதுடன் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியதையும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தளபதி முகாமிற்குள் ஞாபகச் சின்னமாக மாங்கன்று ஒன்றை நட்டதுடன், படையணியில் உள்ள பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் குழு படம் எடுத்துகொண்டார்.பின்னர் தளபதி படையினர் மத்தியில் உரையாற்றியதுடன் அன்றைய நிகழ்ச்சி நிரலை நிறைவு செய்யும் முகமாக அனைத்து நிலையினருடனான மதிய உணவிலும் கலந்து கொண்டார்.