Header

Sri Lanka Army

Defender of the Nation

15th March 2023 19:43:39 Hours

11 வது படைப்பிரிவின் தளபதி 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணிக்கு விஜயம்

4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டபிள்யூடிடிஆர் வீரபுர அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹார அவர்கள் திங்கட்கிழமை (மார்ச் 13) தம்புள்ளை, கிரலகொல்ல 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி முகாமுக்கு விஜயம் செய்தார்.

படையலகு விஜயத்திற்கு முன்னர் தளபதி போவதென்ன மற்றும் மொரகஹகந்த மின் உற்பத்தி நிலையங்களை ஆய்வு செய்தார்.

அங்கு 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர்கள் நிலைநிறுத்தப்பட்டு அந்த இடங்களுக்கு பாதுகாப்பை வழங்குகின்றனர்.

பின்னர், நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை செலுத்தப்பட்ட பின்னர், 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரியால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.

தளபதி படையினருக்கு உரையாற்றியதுடன், அனைவருடனும் குழுப்படம் எடுத்துக் கொண்டார்.

வளாகத்திலிருந்து புறப்படும் முன், அன்றைய விருந்தினர் 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் அதிதி பதிவேட்டில் தனது எண்ணங்களையும் பாராட்டுக்களையும் பதிவிட்டார்.