Header

Sri Lanka Army

Defender of the Nation

13th June 2023 23:06:51 Hours

தளபதியினால் மதுருஓயா மாணவர்களை கராத்தே சாம்பியனாக்க உதவி.

பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே சம்பியன்ஷிப் -2023 போட்டி சனிக்கிழமை (ஜூன் 10) கொழும்பில் நடைபெற்றது. மாதுருஓயா அலவகும்புர மத்திய கல்லூரி மாணவர்களுக்கு இராணுவத்தினால் சரியான நேரத்தில் உதவியதன் மூலம் பாடசாலை கராத்தே போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டத்தை சுவீகரிக்க முடிந்தது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த கராத்தே மாணவர்களின் பெற்றோர்கள், கொழும்பில் நடைபெறும் பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே சாம்பியன்ஷிப் -2023 இல் பங்குபற்றுவதற்காக கொழும்புக்கு அனுப்பி வைக்க முடியாத நிலையில் இருந்தமையால், அலவகும்புர மத்திய கல்லூரியின் அதிபர், மாணவர்களின் திறமைகள் குறித்து அருகிலுள்ள மதுருஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் தளபதியிடம் முன்வைத்தார். இதனை இராணுவத் தளபதியிடம் எடுத்துக்கூறிய பின்னர், பதினொன்றாவது மணியில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்கள் அந்த மாணவர்களின் தேவை மற்றும் கராத்தே மீதான ஆர்வத்தை கருத்தில் கொண்டு, கொழும்பில் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக, இராணுவ பேருந்தில் பாடசாலை அதிகாரிகள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்களுடன் பாதுகாப்பான பயணத்தை முன்னெடுக்குமாறு இராணுவ பயிற்சி பாடசாலையின் தளபதிக்கு உடனடியாக அறிவுறுத்தினார்.

கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே சாம்பியன்ஷிப் -2023 இல் அலவகும்புர மத்திய கல்லூரியின் கராத்தே அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்றது.பேருந்தில் இருந்த இராணுவ பயிற்சி பாடசாலையின் ஊழியர்கள் கொழும்பு சென்று வீடு திரும்பும் போது அந்த மாணவர்களுக்கு காலை உணவு மற்றும் தண்ணீர் போத்தல்களையும் வழங்கினர்.