Header

Sri Lanka Army

Defender of the Nation

25th March 2023 21:23:08 Hours

இலங்கை சமிக்ஞை படையணியின் படைத்தளபதி இலங்கை சமிக்ஞை படையணி பயிற்சி பாடசாலைக்கு விஜயம்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை சமிக்ஞை படையணியின் படைத்தளபதியும் பிரதான சமிக்ஞை அதிகாரியுமான மேஜர் ஜெனரல் சுகத் ரத்நாயக்க வெள்ளிக்கிழமை (மார்ச் 24) கண்டி பூவெலிக்கடையில் உள்ள இலங்கை சமிக்ஞை படையணி பயிற்சி பாடசாலைக்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்.

பிரதான சமிக்ஞை அதிகாரிக்கு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதனை தொடர்ந்து இலங்கை சமிக்ஞை படையணி பயிற்சி பாடசாலை தளபதி கேணல் டிலந்த பெர்னாண்டோ அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு வண்ணமயமான அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது அன்றைய தினத்தின் நினைவாக வளாகத்தில் மாங்கன்று ஒன்றும் படைத்தளபதியினால் நடப்பட்டது.

பின்னர், அன்றைய பிரதம அதிதி படையினர் மத்தியில் உரையாற்றியதுடன், பல பரிமாண பயிற்சிகள், இராணுவத்தினரின் தனிப்பட்ட ஒழுக்கம் மற்றும் அவர்களின் தனிப்பட்ட வாழ்வில் அதன் தாக்கம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும், சமூக ஊடகங்களின் சரியான பயன்பாடு, சூழ்நிலை விழிப்புணர்வு மற்றும் தற்போதைய நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கான வழிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தினார்.

பின்னர், இலங்கை சமிக்ஞை படையணி பயிற்சி பாடசாலை தளபதி பிரதான சமிக்ஞை அதிகாரிக்கு அவரது விஜயத்தின் நினைவாகவிஜயத்தின் நினைவாக சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கினார். பின்னர் தளபதியின் முதன் விஜயத்தின் தொடர்ந்து அனைத்து தரத்தினருடனான தேநீர்விருந்துபசாரத்திற்கு முன்னர் இலங்கை சமிக்ஞை படையணி பயிற்சி பாடசாலைபயிற்சி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை கண்காணிக்க கள விஜயம் செய்துடன் மேலதீக மேம்பாடுகளுக்கான வழிகாட்டுதல்களை வழங்கினார்.

இலங்கை சமிக்ஞை படையணி பயிற்சி பாடசாலை சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், நிரந்தர பணியாளர்கள் மற்றும் நடந்து வரும் பல கற்கைகள் பிரதிநிதித்துவப்படுத்தும் பயிற்சியாளர்கள் குழு இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.