Header

Sri Lanka Army

Defender of the Nation

09th June 2023 18:33:10 Hours

இலங்கை கவச வாகனப் படைத் தளபதிக்கு பிரியாவிடை

மோதர இலங்கை கவச வாகனப் படையணி தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 04) நடைபெற்ற விழாவில், இலங்கை கவச வாகன படையணியின் படையினர், ஓய்வுபெறும் யாழ். முன்னாள் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டீபிஎஸ்என் போதொட்ட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களுக்கு பிரியாவிடை மரியாதை செலுத்தினர்.

மேஜர் ஜெனரல் டீபிஎஸ்என் போதொட்ட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள், 1 வது இலங்கை கவச வாகனப் படையணியின் கட்டளை அதிகாரியினால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். மேலும் வருகை தந்த தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், இராணுவ சம்பிரதாய வண்ணமையமான அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட அணிவகுப்பை மேலாய்வு செய்வதற்கு அணிவகுப்பு கட்டளை அதிகாரிகளான இலங்கை கவச வாகனப் படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் டபிள்யூபீ காரியவசம் மற்றும் கவச வாகன பிரிகேட் தளபதி பிரிகேடியர் பீஎன் விஜேசிரிவர்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆகியோரால் அழைக்கப்பட்டார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி, இலங்கை கவச வாகனப் படையணியின் புதிய படைத் தளபதிக்கு பொறுப்புகளை ஒப்படைப்பதற்கான ஆவணத்தில் தனது உத்தியோகபூர்வ கையொப்பத்தை இட்டார். பின்னர் அனைத்து நிலையினருடனான தேநீர் உபசாரத்திலும் கலந்து கொண்டதுடன், அன்றைய நிகழ்வுகளின் முடிவில், வெளியேறும் படைத் தளபதிக்கு அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் மூலம் வீதியில் இருந்து பிரியாவிடை வழங்கப்பட்டது.

வெளியேறும் படைத் தளபதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் அனைத்து அதிகாரிகளும் கவச வாகன அதிகாரிகளின் உணவகத்தில் தங்கள் மனைவியர்களுடன் பிரியாவிடை இரவு விருந்திலும் கலந்து கொண்டனர். மேஜர் ஜெனரல் டீபிஎஸ்என் போதொட்ட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, தனது இராணுவப் பணியின் போது அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பல வழிகளில் வழங்கிய தாராளமான உதவிக்கு தனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்தார்.

கவச வாகனப் படையணிய சேவை வனிதையர் பிரிவின் தலைவி (வைத்தியர்) திருமதி ஹர்ஷினி போதொட்ட, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.