Header

Sri Lanka Army

Defender of the Nation

07th June 2023 21:07:49 Hours

வெளிச்செல்லும் தளபதி 4 வது இலங்கை பொறியியல் படையணிக்கு விஜயம்

இலங்கை பொறியியல் படைப்பிரிவு தளபதி நியமனத்தை கையளிக்கும் முன்னர், தளபதி மேஜர் ஜெனரல் எஎச்எல்ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 4வது இலங்கை பொறியியல் படையணிக்கு 05 ஜூன் 2023 விஜயம் மேற்கொண்டார்.

இதன் போது 4 வது இலங்கை பொறியியல் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எஸ்ஜேஎம்ஈசிடி சமரகோன் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களால் வரவேற்கப்பட்டார்.

பின்னர், இலங்கை பொறியியல் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எஎச்எல்ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 4 வது இலங்கை பொறியியல் படையணியின் படையினருக்கு உரையாற்றியதுடன், தனது பதவிக்காலத்தில் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகள் மற்றும் இராணுவத்தின் அனைத்து நிர்மாணப் பணிகளிலும் படையினர் வழங்கிய பாராட்டுக்குரிய ஆதரவைப் பாராட்டினார்.

அதன்பின், அவரது வருகையை நினைவுகூரும் வகையில் முகாம் வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்ததுடன் அனைத்து நிலையினருடன் தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார்.