Header

Sri Lanka Army

Defender of the Nation

06th June 2023 17:42:48 Hours

விசேட படையணியின் புதிய படைத் தளபதி பதவியேற்பு

மேஜர் ஜெனரல் டபிள்யுடிடபிள்யூஜி இயலகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ பீடிஎஸ்சீ அவர்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 2) விசேட படையணியின் 13வது படைத் தளபதியாக நவுல விசேட படையணி தலைமையகத்தில் சமய அனுஷ்டானங்கள் மற்றும் சம்பிரதாயங்களுக்கு அமைய கடமைபொறுப்பேற்றார்.

இவர் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டு,மகா சங்க உறுப்பினர்களின் 'செத் பிரித்' பராயணங்களுக்கு மத்தியில் அவர் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

படையணிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட படைத் தளபதி வளாகத்திற்கு வந்தடைந்ததும், நிலைய தளபதி மற்றும் அனைத்துப் பணி நிலை அதிகாரிகளால் மரியதையுடன் வரவேற்கப்பட்டு அழைத்துசெல்லப்பட்டார்.

57 வதுகாலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜேபிசி பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசி, 64 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்டிடபிள்யூகேஎன் எரியகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, 59 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்எம்எம் ரணசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த புதிய நியமனத்திற்கு மேலாக, அவர் முதலாம் படை தலைமையகத்தின் கீழ் உள்ள 58 வது காலாட் படைபிரிவின் தளபதியாகவும் பணியாற்றுகிறார்.