Header

Sri Lanka Army

Defender of the Nation

31st March 2023 09:03:45 Hours

இராணுவத் தளபதி உணவு பாதுகாப்பு திட்டங்களில் ஈடுபட்டுள்ள கிழக்கு படையினருக்கு பாராட்டு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் தனது கிழக்கு விஜயத்தின் போது கல்கந்த இராணுவப் பண்ணையை நேரில் சென்று பார்வையிட்டதுடன், 3 வது (தொ) விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு படையணியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முட்டை உற்பத்தி செயல்முறையையும் பார்வையிட்டார். எதிர்காலத்தில் இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் ஏனைய பண்ணைகளுக்கும் உற்பத்தி செயல்முறை அதன் செயல்முறைகளை விரிவடையச் செய்வதால், இராணுவத்திற்கு தேவையான முட்டைத் தேவைகளை நிவர்த்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து தளபதியின் அவரது விஜயத்தில் கந்தக்காடு இராணுவப் பண்ணையில், 3 வது (தொ) விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு படையணியின் படையினரால் மேற்கொள்ளப்படும் போர் உணவுப் பொதி உற்பத்தி, பால் பொருட்கள், பால் பதப்படுத்தும் பிரிவு மற்றும் கால்நடை பண்ணை போன்ற பல திட்டங்களையும் பார்வையிட்டார்.

அன்றைய நிகழ்ச்சியின் இறுதிப் பிரிவாக, நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கான படையினரின் அர்ப்பணிப்பைத் தூண்டும் வகையில், சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் இராணுவப் பண்ணைகள் மற்றும் விவசாயத் துறையில் சிறந்த இராணுவ வீரர்களுக்கான ரொக்கப் பரிசுகளை வழங்குவதற்கான சிறப்பு பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதி கலந்துகொண்டார்.

விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பணிப்பகத்தின் ஏற்பாடு செய்யப்பட்ட, மேலாதிக்கத்திற்கான 'சிறந்த பண்ணை' போட்டியில் 21 இராணுவ பண்ணைகள் போட்டியிட்டன.

சிறந்த பண்ணை (முதல் இடம்) - இராணுவ பண்ணை - அதிய புளியங்குளம்

சிறந்த பண்ணை (இரண்டாம் இடம்) - இராணுவ பண்ணை - மெனிக் பண்ணை

சிறந்த பண்ணை (மூன்றாம் இடம்) - இராணுவ பண்ணை - கல்கந்த

சிறந்த வளர்ந்து வரும் பண்ணை - இராணுவப் பண்ணை - கந்தகாடு

சிறந்த கட்டளை அதிகாரி – கல்கந்த இராணுவப் பண்ணையின் கெப்டன் டபிள்யூஏவிபீ விஜலத்

சிறந்த சிரேஷ்ட அதிகாரவணையற்ற அதிகாரி - அதிய புளியங்குளம் இராணுவப் பண்ணையின் சிரேஷ்ட அதிகாரவணையற்ற அதிகாரி II ஆர்எம்எம் புத்திக குமார