Header

Sri Lanka Army

Defender of the Nation

09th April 2023 23:29:42 Hours

புத்தாண்டினை முன்னிட்டு கஜபா படையணி தலைமையகத்தில் பண்டிகை பொருட்கள் விற்பனை

இராணுவ தளபதியும் கஜபா படையணியின் படைத்தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியும் கஜபா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியுமான திருமதி ஜானகி லியனகே ஆகியோர் இணைந்து வெள்ளிக்கிழமை (7) காலை கஜபா படையணி சேவை வனிதையர் பிரிவின் புத்தாண்டு கண்காட்சியினை சாலியபுர கஜபா படையணி தலைமையகத்தில் ஆரம்பித்து வைத்தனர்.

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் ஆலோசனையுடன் கஜபா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியின் வழிகாட்டுதலின் கீழ் கஜபா படையணி படையினரின் ஆதரவுடன் கஜபா படையணி சேவை வனிதையர் பிரிவின் பெண்களால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு கண்காட்சியில் வரவிருக்கும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தேவையான பல்வேறு வகையான அத்தியாவசிய பொருட்கள் காணப்பட்டன.

கண்காட்சியில் 25 க்கும் மேற்பட்ட கடைகள் , காய்கறிகள், பழங்கள், மலர் செடிகள், உணவுக் கடைகள் மற்றும் பொழுதுபோக்குக்காக வாயு துப்பாக்கி சுடும் இடம் ஆகியவை காணப்பட்டன. ஒவ்வொரு கடைகளும் ஒவ்வொரு கஜபா படையலகினாலும் மற்றும் கஜபா படையணி தலைமையகத்தினாலும் அமைக்கப்பட்டிருந்தன.

அன்றை நிகழ்வின் பிரதம அதிதிகளான இராணுவ தளபதி மற்றும் அவரது துணைவியாரை நுழைவாயில் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சி.டி. ரணசிங்க ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ, 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி எஸ்பீ அமுனுகம ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு, இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜி டப்ளியூ டப்ளியூ டப்ளியூ டப்ளியூ எம் சி பி விக்ரமசிங்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி மற்றும் கஜபா படையணி நிலைய தளபதி எச்டிடப்ளியு வித்யானந்த ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டனர்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, பாரம்பரிய மங்கள விளக்கேற்றல் மற்ற சிறப்பு பார்வையாளர்களுடன் ஏற்றிய பின்னர், புதுமையான எல்ஈடி விளக்கு (பச்சை விளக்கு) தயாரிப்பு திட்டக் கடையில் நாட வெட்டி, மூன்று நாள் கொண்ட புத்தாண்டு கண்காட்சியை இராணுவத் தளபதி ஆரம்பித்து வைத்தார்.

கஜபா படையணி தலைமையக படையலகினால் ஆரம்பிக்கப்பட்ட குறைந்த விலையில் பச்சை விளக்கு எல்ஈடி விளக்கு திட்டம், நீர்தாமரை மற்றும் 'வெட்டகையா' ஆகியவற்றைப் பயன்படுத்தி பைகள் தயாரிக்கும் திட்டம் மற்றும் இராணுவ சின்னங்கள் தயாரிக்கும் திட்டம் பிரதம விருந்தினரால் நிகழ்விடத்தில் திறந்து வைக்கப்பட்டது.அந்த மூன்று புதுமையான திட்டங்களும் கஜபா படையணி தலைமையக வழிகாட்டுதலின் கீழ் போரில் காயமடைந்த கஜபா படையணி போர் வீரர்களால் ஆரம்பிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டன.

அதன் பின்னர், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் திருமதி ஜானகி லியனகே ஆகியோர் கண்காட்சியின் ஒவ்வொரு கடையையும் பார்வையிட்டனர். இறுதியில், இராணுவத் தளபதி மற்றும் அவரது மனைவி இருவரும் அனைத்து அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் குளக்கரையில் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டனர்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் புத்தாண்டு கண்காட்சியை பார்வையிட்டனர்.