Header

Sri Lanka Army

Defender of the Nation

11th April 2023 11:12:10 Hours

படையினரின் பங்களிப்புடன் புத்தாண்டு நிகழ்வு

நாட்டின் மிகப்பெரிய சேவை வழங்குனரான இலங்கை இராணுவத்தின் வருடாந்த சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவை முன்னெடுக்கும் நிமித்தம் ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் சேவையாற்றும் நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்களின் பங்களிப்புடன் பனாகொடை இராணுவ வளாகத்தில் திங்கட்கிழமை (ஏப்ரல் 10) ம் திகதி வழக்கமான நிகழ்வுகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுக்கள் இடம் பெற்றன.

இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அவர்கள் இருவரையும் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி, மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் செனரத் யாப்பா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ,மேற்குப் பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபீ புஸ்செல்ல ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ மற்றும் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபீ விக்கிரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஆகியார் ஊர்வலமாக விழா நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் இராணுவத் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ ஆகியோர்களால் தேசிய கொடியையும் இராணுவக் கொடியையும் ஏற்றி அன்றைய நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர். தொடர்ந்து, தேசிய கீதம் மற்றும் இராணுவப் பாடல் இசைக்கப்பட்டது. பின்னர், உயிர்நீத்த அனைத்து போர் வீரர்களின் நினைவாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள், புத்துணர்ச்சியுடனும் ஆர்வத்துடன் நிகழ்வுகளில் பங்கேற்றதுடன், பல்வேறு பாரம்பரிய நிகழ்வுகள் மற்றும் கேளிக்கை, கலாசாரம் நிறைந்த விளையாட்டுகள், கயிறு இழுத்தல், தலையணை சண்டை, வளுக்கு மரம் ஏறுதல், போன்ற போட்டிகளில் தங்களின் பங்களிப்பை வழங்கினர். பனிஸ் சாப்பிடுதல், பப்பாளி விதைகளை எண்ணுதல், யானைக்கு கண் வைத்தல், பானை உடைத்தல், புத்தாண்டு அழகுராணி மற்றும் அழகுராஜா தேர்வு, தென்னம் ஓலை பின்னுதல், மரத்தன் ஓட்டம், விநோத உடை, தடை தாண்டுதல், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், ரபான் இசைத்தல் போன்றவை இடம் பெற்றன.

இந் நிகழ்வுகளை சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், ஏனைய அழைப்பாளர்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் உறுப்பினர்களால் அன்றைய நிகழ்வுகள் வேடிக்கையையும் பொழுதுபோக்கையும் சேர்த்தது.

மேலும், இராணுவ வீரர்களால் வடிவமைக்கப்பட்ட 'கெமிகெதர' எனும் கிராமிய வீடு கிராமபுர அமைப்புகளை நினைவூட்டும் பல மாதிரி கட்டமைப்புகளும் மைதானத்தில் கவர்ச்சிகரமான காட்சிகளாக இடம் பெற்றிருந்தன. மேலும், இந்நிகழ்வின் போது இராணுவத் தளபதி படையினருடன் நெருக்கமான உரையாடலை மேற்கொண்டார்.

நிரந்தரமாக காயமடைந்த போர்வீரர்களின் வீரப் பங்களிப்பை மறவாது, 'மிஹிந்து செத் மெதுர', ராகம' ரணவிரு செவன' மற்றும் 'அபிமன்சல' நல விடுதிகளின் குழுவிற்கும் இதே சந்தர்ப்பத்தில் விசேட பரிசுகளும் உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன. இராணுவத் தளபதி மற்றும் திருமதி ஜானகி லியனகே ஆகியோர் இணைந்து அந்த பரிசீல்களை விநியோகித்தனர்.

அன்றைய நிகழ்வின் இறுதியில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே, இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி, மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் செனரத் யாப்பா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகள் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் வெற்றிக்கிண்ணங்களை வழங்கினர்.