Header

Sri Lanka Army

Defender of the Nation

30th April 2023 06:45:28 Hours

யாழில் ஜனாதிபதியின் நிவாரணத் திட்டம்

ஜனாதிபதி பணிக்குழு பிரதானியும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகருமான திரு. சாகல ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சர் கௌரவ. டக்ளஸ் தேவானந்தா, சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ ஆகியோர் யாழ் குடாநாட்டிற்கு வெள்ளிக்கிழமை (28) விஜயம் மேற்கொண்டனர்.

அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பேரில் நடைமுறைப்படுத்தப்பட்ட நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசிப் பொதிகளை அரசாங்கம் வழங்குவதற்கு இணையாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ஒன்றுக்கு 10 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. ஆரம்பத்தில், அரிசி மானியம் 2 மில்லியன் குடும்பங்களுக்கு வழங்கப்பட இருந்தது, ஆனால் அது ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய 2.9 மில்லியன் குடும்பங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், ஏனைய மாவட்டங்களிலும் இலவச அரிசி விநியோகம் விரைவில் நடைபெறும்.

இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடைப் படையணி யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பங்களுக்கு விநியோகிப்பதற்காக இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடைப் படையணியினால் நிர்வகிக்கும் பண்ணைகளிலிருந்து 10,000 கிலோ அரிசியை மகத்தான திட்டத்திற்கு நன்கொடையாக வழங்கியது.

இதன்படி, வேலனை மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலகங்களில் இரண்டு தனித்தனியான விநியோக வைபவங்கள் இடம்பெற்றதுடன், அந்த அரிசிப் பொதிகளை திரு. சாகல ரத்நாயக்க அவர்களினால் அடையாளமாக விநியோகிக்கப்பட்டன.

அதன் பின்னர், இராணுவத் தளபதி அவர்கள் வருகை தந்தவர்களுடன் யாழ்ப்பாணம் மயில்லட்டியில் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட காணிகளைப் பார்வையிட்டதுடன், இவ்வருடம் பெப்ரவரி மாதம் விடுவிக்கப்பட்ட அந்தக் காணிகளில் மீள்குடியேற்றத்தின் முன்னேற்றங்களையும் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட மாவட்டச் செயலாளர் திரு.ஏ.சிவபாலசுந்தரன், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிபிஎஸ்என் போத்தொட்ட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சி, சிரேஷ்ட அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.