Header

Sri Lanka Army

Defender of the Nation

01st June 2023 20:27:14 Hours

உடுதும்பர இலேசாயுத காலாட் படையணி சிப்பாய்க்கு சின்னம் வழங்கல்

தனியார் பேருந்தில் பயணித்த 50 க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியை சேர்ந்த கோப்ரல் கேஎம்பிஆர்கேஎல் கருணாரத்ன அவரது சேவையை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பாராட்டினார். அவருக்கு இராணுவத் தலைமையகத்தில் வியாழக்கிழமை (1) அன்று இராணுவத் தளபதியினால் வீரச் செயலுக்கான பதக்கம் வழங்கப்பட்டது. இலங்கை இராணுவத்தின் 24 வது தளபதியாக பதவியேற்ற இராணுவத் தளபதியின் முதலாம் ஆண்டு நிறைவை நினைவு கூறும் வகையில் இந்த பாராட்டு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உடுதும்பர பகுதியில் பஸ் சாரதி வளைவு பாதையில் பேசிக்கொண்டு வாகனத்தை செலுத்தியமையால் திடீரென சாரதியின் கதவு வழியாக தூக்கி வீசப்பட்டதால் பஸ் சாரதி இல்லாமல் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு பேருந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

அதன் போது பேருந்தில் இருந்த இராணுவ கோப்ரல் கேஎம்பிஆர்கேஎல் கருணாரத்ன அவர்கள் உடனடியாக சாரதியின் ஆசனத்தில் அமர்ந்து, பிரேக் போட்டு, ஓடும் பேருந்தை சில நொடிகளில் கட்டுப்படுத்தி, பெரும் அனர்த்தத்தை தடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும்.

இராணுவத் தளபதி, அவரது மனதின் பிரசன்னம் மற்றும் அதிசயமான தலையீட்டால் அவரது துணிச்சலைப் பாராட்டியதுடன், தளபதியின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்ட கோப்ரல் கேஎம்பிஆர்கேஎல் கருணாரத்ன அவர்களுக்கு இராணுவத் தளபதி பாராட்டுப் பதக்கம் வழங்கினார். அவரது இச் செயலுக்காகவும், ஒரு துணிச்சலான சிப்பாயின் பொதுவான குணத்திற்காகவும் தளபதி பாராட்டு தெரிவித்ததுடன் எதிர்காலத்திற்கு அவருக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்த அசார்தியமான செயலை செய்ய ஊக்கப்படுத்தியது அனுபவம் மற்றும் சிப்பாயின் பயிற்சியே தவிர வேறு எதுவும் இல்லை என்று இராணுவத் தளபதி கூறினார். கோப்ரல் கேஎம்பிஆர்கேஎல் கருணாரத்ன அவர்கள் விசேட காலாட் படையணி நடவடிக்கை பாடநெறி (6 மாதங்கள்), தலைமைத்துவம் மற்றும் தொழில் அபிவிருத்தி பாடநெறி (1 மாதம்), மற்றும் அடிப்படை அனர்த்த முகாமைத்துவ பாடநெறி (3 மாதங்கள்) ஆகியவற்றைப் பின்பற்றியுள்ளார்.

இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபீ விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டபிள்யூபீடிடிஆர் வீரபுர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.