Header

Sri Lanka Army

Defender of the Nation

04th May 2023 19:35:46 Hours

இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட கங்காராம வெசாக்' அலங்காரங்கள் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

கௌரவ அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட குழுவினருடன் புதன்கிழமை (3) மாலை கங்காராம 'பௌத்த ரஷ்மி வெசாக்' வலயத்தின் சம்பிரதாய திறப்பு விழாவில் கலந்து கொண்டார். வெசாக் வாரத்தில் (4-10) காட்சிப்படுத்துவதற்காக இராணுவத்தினர் பல வண்ணமயமான, அலங்கார மற்றும் ஆக்கப்பூர்வமான நிர்மாணங்களை வடிவமைத்துள்ளனர்.

புத்தரின் பிறப்பு, ஞானம் மற்றும் 'பரிநிர்வணம்' என்பன நினைவாக அர்ப்பணிக்கப்பட்ட அந்த அலங்கார மின் குமிழ்கள் மற்றும் அலங்காரப் பொருட்களின் கண்காட்சியின் திறப்பு நிகழ்விற்கு முன்னதாக, கௌரவ அதிமேதகு ஜனாதிபதி மற்றும் அழைப்பாளர்கள் கங்காராம விகாரை வளாகத்திற்குள் இடம் பெற்ற மத நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

கங்காராமை விகாராதிபதி வண. கலாநிதி கிரிந்த அஸ்ஸஜி நாயக்க தேரர் அவர்கள் விசேட சொற்பொழிவை நிகழ்த்தியதுடன், உலக மக்களுக்கும் அனைத்து பௌத்தர்களுக்கும் 'வெசாக்' என்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

பின்னர், ஜனாதிபதி, முப்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பல்வேறு அமைப்புக்களினால் உருவாக்கப்பட்ட ஆக்கப்பூர்வமான வெசாக் அலங்கார காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அலங்காரங்களை பார்வையிட விஜயம் செய்வதற்கு முன்னர், வெசாக் வலயத்தில் மின் அலங்காரங்களை ஆரம்பித்து வைக்க அழைக்கப்பட்டார். மின்சாரம் மற்றும் இயந்திரப் பொறியியில் பணிப்பகத்தின் படையினரால் வடிவமைக்கப்பட்ட 'அபாய' (நரகம்) என்ற மாதிரி கண்காட்சிகளை பார்வையிட்டதுடன் அவர் இராணுவ வீரர்களுடன் சில கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.

விஜயம் செய்த இராணுவத் தளபதி வெசாக் வலயத்திற்கான பல்வேறு படைப்பிரிவுகளின் இராணுவப் பங்களிப்பாளர்களுடன் கலந்துரையாடியதுடன், அவர்களின் ஆக்கப்பூர்வமான திறமைகளையும் பாராட்டினார். சில நிமிடங்களுக்குப் பிறகு, கௌரவ ஜனாதிபதி, அழைப்பாளர்களுடன் பல வெசாக் ஆக்கங்களை பார்வையிட்டதுடன், காட்சிப்படுத்தப்பட்ட படைப்புத் திறமைகளைப் பாராட்டினார்.

இராணுவ நிறைவேற்றுப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி, மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜேஏஆர்எஸ்கே ஜயசேகர யூஎஸ்பீ பீஎஸ்சி ஆகியோர், ஜனாதிபதியின் வெசாக் வலயத்தின் ஆரம்ப நிகழ்வு ஏற்பாடுகளுடன் இணைந்து கொண்டனர்.