Header

Sri Lanka Army

Defender of the Nation

31st January 2023 18:30:42 Hours

இலேசாயுத காலாட் படையணியின் பயிற்சி பாடசாலையில் ஆட்சேர்ப்பு பயிற்சிநெறி - இல 107 நிறைவு

பூஸ்ஸ இலங்கை இலேசாயுத காலாட் படையணி பயிற்சி பாடசாலையில் இல - 107 ஆட்சேர்ப்பு பயிற்சிநெறி நிறைவு சனிக்கிழமை (ஜனவரி 21) திகதி வண்ணமயமான பிரிய விடை அணிவகுப்பு நடைபெற்றது. இந் நிகழ்வில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இல – 107 பயிற்சிநெறி 2022 ஜூலை 20 ஆரம்பிக்கப்பட்டு 2023 ஜனவரி 21 வரை தொடர்ந்தது. இப் பயிற்சியில் 291 ஆட்சேர்ப்பு சிப்பாய்கள் பங்கேற்றினர். இப்பயிற்சியின் போது பயிற்சியாளர்கள் பல்வேறு பயிற்சி அமர்வுகளை மேற்கொண்டதுடன் இறுதியாக அனைவரினதும் கைதட்டல்களுக்கு மத்தியில் தங்கள் திறமைகளையும் வெளிப்படுத்தினர்.

முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் இப்பிரிய விடை அணிவகுப்பு நிகழ்வைக் கண்டுகளித்தனர்.

பிரதம அதிதி, பின்வரும் பயிற்சியாளர்களை விசேடமாகப் பாராட்டியதுடன், பாடநெறியின் போது வெளிப்படுத்தப்பட்ட அவர்களின் திறமைகளுக்காக வெற்றிக் கிண்ணங்களையும் வழங்கினார்.

தகுதி வரிசையில் முதலிடம் - சிப்பாய் பிஎம்டிசி குமார - விஜயபாகு காலாட் படையணி

சிறந்த உடல் பயிற்சி - சிப்பாய் ஏஏஏசிடி ஜயசிங்க - இலேசாயுத காலாட் படையணி

சிறந்த துப்பாக்கி சுடும் வீரர் – சிப்பாய் ஜிடிஎஸ்என் திலகரத்ன - இலேசாயுத காலாட் படையணி