Header

Sri Lanka Army

Defender of the Nation

27th January 2023 23:26:26 Hours

வன்னி தளபதி 62 வது படைப்பிரிவிற்கு விஜயம்

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க அவர்கள் வவுனியாவிலுள்ள 62 வது காலாட் படைப்பிரிவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 24) மேற்கொண்டதுடன், 62 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜானக ரணசிங்க அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.

பிரதான நுழைவாயிலில் வன்னி தளபதியின் வாகன தொடரணிக்கு படையினரால் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், 62 வது காலாட் படைப்பிரிவின் கீழ் பணியாற்றும் அனைத்து பிரிகேட்கள் மற்றும் படையலகுகளின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றுகையில் ஒழுக்கமான மற்றும் பொருளாதார ரீதியாக நல்ல சிப்பாயாக இருப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

தளபதி அவர்கள் தனது விஜயத்தின் நினைவாக 62 வது காலாட் படைப்பிரிவு வளாகத்தில் மாங்கன்றினை நட்டதன் பின் முகாமில் உள்ள சூட்டுத்திடலை பார்வையிட்டார். இறுதியாக தளபதி அவர்கள் 62 வது காலாட் படைப்பிரிவின் பிரிகேட் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.