Header

Sri Lanka Army

Defender of the Nation

24th January 2023 19:22:43 Hours

இராணுவ குடும்பங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு நன்கொடை வழங்கள்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 57 வது காலாட் படைப்பிரிவின் 571 வது காலாட் பிரிகேட் படையினரால் சிவில் ஊழியர்கள் மற்றும் இராணுவத்தினரின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு ரூபா 125,000/= பெறுமதியான பாடசாலைப் பைகள், கற்றல் உபகரணங்கள் மற்றும் எழுதுபொருட்கள் உள்ளடங்கப்பட்ட பொதிகள் செவ்வாய்க்கிழமை 17 ம் திகதி நன்கொடையாக வழங்கப்பட்டது.

இக் கல்வித் தேவைகளுக்கான நிதியுதவி 571 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் கேஜிசிஎம்எச் கம்லத் அவர்களின் வேண்டுகோளுக்கமைய இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியில் மறைந்த மேஜர் விராஜ் விமலசூரிய அவர்களின் குடும்ப உறுப்பினர்களால் வழங்கப்பட்டது.

571 வது காலாட் பிரிகேட் தலைமையகத்தில் இடம்பெற்ற விநியோக நிகழ்வில் பிரதம அதிதியாக 571 வது காலாட் பிரிகேட் தளபதி அவர்கள் கலந்து கொண்டதுடன், சிவில் விவகார அதிகாரி மற்றும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் இராணுவத் தலைமையகத்தின் வழிகாட்டுதலுக்கமைய, 571 வது கலாட் பிரிகேட் தலைமையகத்தில் பணிபுரியும் பல சிவில் ஊழியர்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

இத் திட்டத்தில் ஒரு குடும்பத்தில் 3 குழந்தைகளுக்கு மேல் வசிக்கும் குடும்பங்களில் இருந்து பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டனர்.