Header

Sri Lanka Army

Defender of the Nation

25th January 2023 21:33:41 Hours

விஷேட அதிரடி படையலகு பாடநெறி எண்: 03 நிறைவின் சான்றிதழ் வழங்கல்

பம்பைமடு படையலகு பயிற்சிப் பாடசாலையில் இடம் பெற்ற விஷேட அதிரடி படையலகு பாடநெறி இலக்கம் 03 ன் நிறைவின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க அவர்கள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 24) இடம்பெற்றது.

டிசம்பர் 19 தொடக்கம் 24 வரை நடத்தப்பட்ட பாடநெறியில் 21, 54, 56, 62 மற்றும் 65 காலாட்படை பிரிவுகளில் இருந்து 05 அதிகாரிகள் மற்றும் 124 சிப்பாய்கள் பங்குபற்றினர்.

இப் பாடத்திட்டத்தின் ஜிபிஎஸ், தற்காப்புக் கலைகள், தற்காப்பு முறைகள், நிராயுதபாணியான போர், விஐபி பாதுகாப்பு, வெடிபொருட்கள் மற்றும் தகர்த்தல் தொடர்பான அறிமுகம், ஆயுதங்களைக் கையாளுதல், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், துப்பாக்கிச் சூடு, நடவடிக்கை சட்டம், சிறப்பு பயிற்சிகள் மற்றும் பயிற்சி அமர்வுகளில் செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் உள் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை உள்ளடங்கும்.

பயிற்சியின் நிறைவு நிகழ்வில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதி, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பின்வரும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு அவர்களின் திறன் மற்றும் திறமைகளுக்காக வெற்றி கிண்ணங்கள் வழங்கப்பட்டன;

சிறந்த படையலகு - 54 வது காலாட் படைபிரிவு

சிறந்த 8 பேர் கொண்ட அணி - 54 வது காலாட் படைபிரிவின் 8 வது விஜயபாகு காலாட் படையணியின் 3வது பிரிவு

சிறந்த படைப்பிரிவு தளபதி - 17 வது விஜயபாகு காலாட் படையணியின் இரண்டாவது லெப்டினன் ஜிஎன்ஆர் ஜயவீர

சகல துறையிலும் சிறந்த - 8 வது விஜயபாகு காலாட் படையணி கோப்ரல் எல்எச்என்கே லன்சாகர -

சிறந்த துப்பாக்கி சுடு வீரர் - 17 வது விஜயபாகு காலாட் படையணியின் இரண்டாவது லெப்டினன் ஜிஎன்ஆர் ஜயவீர,

சிறந்த உடற்பயிற்சியாலராக - 17 வது விஜயபாகு காலாட் படையணியின் கோப்ரல் ஆர்எம்என்எஸ் ரத்நாயக்க