Header

Sri Lanka Army

Defender of the Nation

25th January 2023 21:59:17 Hours

நிர்வாகம் மற்றும் செயற்பாடு தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு பொது பணி பணிப்பாளர் நாயகம் யாழ் விஜயம்

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் நிர்வாகம் மற்றும் செயற்பாடு, பயிற்சி மற்றும் நிர்வாக அம்சங்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நிமித்தம் பொது பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே அவர்கள் செவ்வாய்க்கிழமை (24) தலைமையகத்தை வந்தடைந்தார்.

வருகை தந்த அவரை யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட அவர்களால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து பாதுகாவலர் அறிக்கையிடல் வாகன தொடரணி மரியாதை வழங்கப்பட்டது.

வருகையை மேற்கொண்ட பொது பணி பணிப்பாளர் அவர்கள், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட, 51 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வஜிர வெலகெதர, 52 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சீவ பெர்னாண்டோ, வடக்கு முன்னரங்க பராமரிப்பு பிரிவின் தளபதி பிரிகேடியர் கிளிபோர்ட் த சொய்சா, யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பணி, யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதி பிரிகேடியர் அனுர பண்டார, பிரிகேட் தளபதிகள், பிரிகேடியர் ஒருங்கிணைப்பு (தொண்டர்), பிரிகேடியர் ஜனித் பண்டார, யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணியாற்றும் படையலகுகளின் கட்டளை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடினார்.

ஒவ்வொரு இராணுவ ஸ்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் தங்கள் கருத்துகளை தெரிவிப்பதற்கு முன் பொது பணி பணிப்பாளர் நாயகம் தனது கருத்துகளை முன்வைத்தனர். பொது பணி பணிப்பாளர் நாயகம் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதுடன் மற்றும் தீர்வுகளைக் கண்டறிவதற்கான கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார்.

பின்னர், பொது பணி பணிப்பாளர் நாயகம், படையலகின் விடத்தல்பளை பயிற்சிப் பாடசாலை மற்றும் ஐயக்கச்சியில் உள்ள 12 (தொ) விஜயபாகு காலாட் படையணி உட்பட பல இராணுவ நிறுவனங்களுக்கு தனது விஜயத்தை மேற் கொண்டார்.

விஜயத்தின் முடிவில், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி சார்பாக, அன்றைய பிரதம அதிதிக்கு அடையாள நினைவுச் சின்னம் வழங்கியதுடன், படையினரைச் சந்திப்பதற்கும் தகவல்களை பெறுவதற்கும் அவர் யாழில் இருப்பதைப் பாராட்டினார். யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்ததைக் குறிக்கும் வகையில் அதிதிகள் புத்தகத்திலும் அவர் தனது கருத்துகளை கையொழுத்திட்டார்