Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd January 2023 16:50:39 Hours

மலேசிய ரோட்டரி கழகத்தினர் யாழ்ப்பாணத்தின் இராணுவ சமூக திட்டங்கள் பற்றி அறிதல்

மலேசிய ரோட்டரி மாவட்டம் 3030 (மலேசியா) யின் இருந்து 16 பேர் அடங்கிய குழுவொன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 20) இலங்கையில் உள்ள அவர்களது இலங்கை சகாக்களின் அழைப்பின் பேரில் இலங்கை ரோட்டரி மாவட்டம் 3220 க்கு விஜயம் செய்த போது யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்தனர்.

தலைமையக வளாகத்திற்கு வந்தடைந்த மலேசிய தூதுக்குழுவை யாழ். பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போத்தொட்ட, யாழ். பாதுகாப்புப் படை தலைமையக பிரிகேடியர் பொது பணி பிரிகேடியர் தம்மிக்க கருணாபால அவர்களுடன் அன்புடன் வரவேற்றார்.

அதன் பின்னர் தூதுக்குழுவினர் தற்போதைய இராணுவ ஈடுபாடுகள் மற்றும் மக்களின் நல்வாழ்வுக்கான அர்ப்பணிப்பு மற்றும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் ஊடாக நல்லிணக்க நகர்வுகளில் விசேட கவனம் செலுத்தி யாழ் குடாநாட்டில் சிவில் இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துதல் குறித்து கலந்துரையாடினர்.

இக் கலந்துரையாடலில் யாழ்.பாதுகாப்பு படை தலைமையக தளபதி, யாழ். பாதுகாப்புப் படை தலைமையக பிரிகேடியர் பொது பணி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலுக்குப் பிறகு, தலைமை நிர்வாக அதிகாரி திரு ஜெரி டேனியல் தலைமையிலான குழு குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கான ஆங்கில மொழி வகுப்புகள் நடைபெறும் டி-சந்தியில் உள்ள "அம்பலம்" கட்டிடத்திற்குச் சென்றனர். பலாலியில் உள்ள அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்விற்கு முன்னதாக தூதுக்குழுவினர் ஆங்கிலம் கற்கும் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் புத்தகங்களை பரிசாக வழங்கினர்.

யாழ்ப்பாணத்திற்கான கள விஜயத்தின் போது, பிரதிநிதிகள் குழு பல இராணுவ தளங்களுக்கு விஜயம் செய்ததுடன், சிவில் சமூகம் சார்ந்த திட்டங்கள் குறித்து அந்தந்த அதிகாரிகளுடன் தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.