Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd January 2023 16:00:39 Hours

மன்னார் படையினர் மக்கள் நலனுக்காக அரச அதிகாரிகளுடன் ஒன்றினைவு

பொதுமக்களின் குறைகளை மேலும் நிவர்த்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் முயற்சியில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 54 வது காலாட் படைப்பிரிவின் 541 வது காலாட் பிரிகேட் தலைமையகம் பிரதேச செயலகத்துடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் மாந்தை மேற்கு, நாட்டான் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் அபிவிருத்திக்காக கலந்துரையாடல்களை 12 வது (தொ) இலங்கை பீரங்கி படையணி (வெடித்தல்தீவு பகுதிகளை உள்ளடக்கியது) மற்றும் 10 வது (தொ) கெமுனு ஹேவா படையணி (சிறிநாத்குளம் மற்றும் மன்னார் பகுதிகளை உள்ளடக்கியது) ஆகியவற்றிற்கு அந்தந்த கிராமசேவையாளர்களை அழைத்து2023 ஜனவரி 19-20 திகதிகளில் நடத்தியது.

12 வது (தொ) இலங்கை பீரங்கி படையணி மற்றும் 10 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரிகளின் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் அனுபவிக்கும் பல்வேறு பிரச்சினைகள் விவசாயிகளின் தேவைகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் குறைகள், உட்கட்டமைப்பு வசதிகளின் பற்றாக்குறை, சிவில்-இராணுவ ஒத்துழைப்பை ஊக்குவிப்பதில் சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் அவர்களின் அறுவடைகளின் போக்குவரத்து, பொருளாதார தடைகள் போன்றவை பற்றி கலந்துரையாடப்பட்டது.

அந்த ஒருங்கிணைப்பு மாநாட்டில் பங்கேற்ற 45 கிராமசேவை அலுவலர்கள் (அரச அதிகாரிகள்) தனித்தனியாக தங்கள் கருத்துக்களை கூறியதோடு சம்பந்தப்பட்ட பகுதிகளில் தங்களின் பிரச்சினைகளின் தன்மையை சுட்டிக்காட்டியதுடன் அதைத் தீர்ப்பதற்கு இராணுவத்தின் ஒருங்கிணைப்பையும் உதவியையும் கோரினர்.

54 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நளின் நியங்கொட மற்றும் 541 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் தசந்தமுனசிங்க ஆகியோர் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களை இரு கட்டளை அதிகாரிகளுக்கும் வழங்கியிருந்தனர்.