Header

Sri Lanka Army

Defender of the Nation

21st January 2023 23:51:39 Hours

முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் பதவியேற்பு

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் பிரிகேடியர் துமிந்த குணசிங்க அவர்கள் முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிப்பகத்தின் பணிப்பாளராக புதன் கிழமை (ஜனவரி 18) இராணுவ தலைமையக அலுவலகத்தில் இடம்பெற்ற எளிமையான நிகழ்வின் போது கடமைகளை பொறுப்பேற்றார்.

பணிப்பகத்தின் அதிகாரிகள் முன்னிலையில் மகா சங்க உறுப்பினர்களின் 'செத் பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில், உத்தியோகபூர்வ ஆவணத்தில் தனது கையொப்பத்தை இட்டு தனது புதிய பதவியினை அதிகாரபூர்வமாக பெறுப்பேற்றார்.

கடமைகளை பொறுப்பேற்றவுடன் பிரிகேடியர் துமிந்த குணசிங்க அதிகாரிகள் மற்றும் பணிப்பகஊழியர்களுக்கு உரையாற்றியதுடன் தனது நோக்கத்தினை முன்வைத்தார்.பிரிகேடியர் பிரசாந்த விமலசிறி அவர்கள் இராணுவத் தலைமையக நிர்மாண முகாமைத்துவப் பிரிவிற்கு மாற்றமடைந்ததையடுத்து இவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.